For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக்.குக்குள் புகுந்து தீவிரவாதிகளை தாக்க அமெரிக்க திட்டம்-அனுமதி கோருகிறது

Google Oneindia Tamil News

US Troops
வாஷிங்டன்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலை கொண்டு அட்டகாசம் செய்து வரும் அல் கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு போதிய நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வருவதால், பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளுக்கு எதிராக பெரும் தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக பாகிஸ்தானிடம் அது அனுமதி கோரியுள்ளது.

இது குறித்து தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி...

இந்த புதிய திட்டத்தை வாஷிங்டன் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி பாகிஸ்தானுக்குள் ராணுவ நடவடிக்கை அதிகரிக்கப்படும். தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்தபடி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது அமெரிக்கா.

ஆனால் பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்கு தரை மார்க்கமாக தீவிரவாதிகளை தாக்கி அழிக்க அமெரிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் இதை பாகிஸ்தான் அனுமதிக்காது என்றே தெரிகிறது. இந்தத் திட்டம் தொடர்ந்து பரிசீலனையில் உள்ளது.

அதேசமயம், எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதே சரியானது என்று அமெரிக்க ராணுவம் கருதுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
US is highly dissatisfied with Pakistan"s effort to kick militants out of the country. As a result, US military is planning to cross the border and carry out ground raids. This plan is not yet approved but is under consideration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X