For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராக்கெட் கிளம்பியவுடன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜிஎஸ்எல்வி தகர்க்கப்பட்டது-இஸ்ரோ விளக்கம்

Google Oneindia Tamil News

ISRO Chief Radhakrishnan
ஸ்ரீஹரிகோட்டா: ஜிஎஸ்எல்வி ராக்கெட் கிளம்பிய சில விநாடிகளிலேயே அது தனது கட்டுப்பாட்டை இழந்ததால் அதை தகர்க்க நேரிட்டதாக இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்திய விண்வெளித்துறைக்கு நேற்று மிகப் பெரிய சோக தினமாக மாறி விட்டது. நாடே பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், ஏவப்பட்ட ஒரு நிமிடத்திற்குள்ளேயே அனைவரின் கனவுகளையும் தகர்த்து விட்டது ஜிஎஸ்எல்வி ராக்கெட்.

அதிக எடை கொண்ட ஜிசாட் செயற்கைக்கோளுடன் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட், புறப்பட்ட சில விநாடிகளிலேயே வெடித்துச் சிதறியது. இந்திய விண்வெளித் திட்டங்களுக்கு, குறிப்பாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் கனவுக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இதுகுறித்து தற்போது இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ராக்கெட்டின் முதல் கட்டத்தில் தொழில்நுட்பப் பழுது ஏற்பட்டதால் ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி ராக்கெட்டை தகர்த்து அது கடலில் விழுமாறு செய்ய நேரிட்டு விட்டது.

ராக்கெட்டை ஏவிய 45வது விநாடியில் ராக்கெட்டின் கட்டுப்பாடு துண்டிக்கப்பட்டது. 50வது விநாடியில் ராக்கெட்டின் முதல் கட்டத்தில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து ராக்கெட்டை வெடிக்கச் செய்து அதை கடலில் விழ வைக்க தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டத்தில் இருந்த மோட்டாருக்குச் செல்ல வேண்டிய கட்டளைகள் சரியாக போய்ச் சேரவில்லை. இதனால்தான் அது பழுதடைந்தது.

ராக்கெட்டை வடிவமைத்ததில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் முதல் கட்டத்தில் உள்ள மோட்டாருக்குச் செல்ல வேண்டிய கட்டளைகள் போய்ச் சேரவில்லை. மோட்டாருக்குக் கட்டளைகளைக் கொண்டு செல்ல வேண்டிய நான்கு ஸ்டிராப்புகள் துண்டிக்கப்பட்டதால்தான் இந்த கோளாறு ஏற்பட்டதாக சந்தேகிக்கிறோம் என்றார்.

முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.கஸ்தூரிரங்கன் கூறுகையில், இது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. மிகவும் சோகமாக உள்ளோம். மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தோம்.

ராக்கெட் பழுதடைய என்ன காரணம் என்பதை ஆராயவள்ளோம். இதற்காக டெலிமெட்ரி டேட்டாவை ஆராயவுள்ளோம். ராக்கெட்டின் முதல் நிலையில் பழுது ஏற்பட்டது யாரும் எதிர்பாராததாகும் என்றார்.

கடந்த ஏப்ரல் 15ம் தேதி ஜிஎஸ்எல்வி-டி3 ஏவப்பட்டது. இதுவும் தோல்வியில் முடிவடைந்தது. அப்போது நாமே வடிவமைத்த கிரையோஜெனிக் என்ஜினை அதில் பயன்படுத்தியிருந்தனர். அது செயிலிழந்ததால், ராக்கெட் கிளம்பியசில விநாடிகளில் வெடித்துச் சிதறியது. அப்போது ராக்கெட்டின் 3வது கட்டத்தில்தான் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் தற்போது முதல் கட்டத்திலேயே தோல்வி அடைந்திருப்பது விஞ்ஞானிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை பயன்படுத்துவதற்காக ரஷ்யாவிடமிருந்து நாம் 7 கிரையோஜெனிக் எந்திரங்களை வாங்கியிருந்தோம். அவற்றில் தற்போது ஆறு என்ஜின்களை பயன்படுத்தி விட்டோம். ஒரு என்ஜின் மட்டுமே தற்போது பாக்கி உள்ளது.

முன்னாள் இஸ்ரோ தலைவர் யு.ஆர். ராவும், ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் தோல்வி குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், எனது வாழ்க்கையில் முதல் நிலையிலேயே ராக்கெட் தோல்வி அடைந்திருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.

டெலிமெட்ரி டேட்டாவை ஆராயமல் இதுகுறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது. கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு ஏற்படுதல் அல்லது திட எரிபொருள் கசிவு உள்ளிட்ட ஏதாவது ஒரு தவறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என கருதுகிறேன் என்றார்.

பிஎஸ்எல்வி ராக்கெட்களில் முற்றிலும் திட எரிபொருள் பயன்படுத்தப்படும். ஜிஎஸ்எல்வி ராக்கெட்களின் முதல் இரு நிலைகளிலும் கூட திட எரிபொருள்தான் பயன்படுத்தப்படும். ஆனால் கடைசி நிலையான 3வது கட்டத்தில் மட்டும் திரவ எரிபொருள் பயன்படுத்தப்படும். அதாவது கிரையோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்படும். இதுதான் ராக்கெட்டை படு வேகமாக உந்தித் தள்ள உதவுகிறது. இந்த கிரையோஜெனிக் எந்திரம்தான் நம்மிடம் இதுவரை இல்லாமல் உள்ளது. இதை தயாரிக்கும் பணியில்தான் இந்தியா பல ஆண்டுகளாக தீவிரமாக முயன்று வருகிறது. தற்போது நாம் பயன்படுத்தி வரும் கிரையோஜெனிக் எந்திரங்கள் ரஷ்யாவிடமிருந்து பெற்றவையாகும்.

ஜிஎஸ்எல்வி ராக்கெட்களை நாம் வெற்றிகரமாக செலுத்தினால்தான் விண்வெளித்துறையில் பல பெரிய சாதனைகளை படைக்க முயல முடியும். குறிப்பாக விண்ணுக்கு மனிதனை அனுப்பும் கனவும் சாத்தியமாக முடியும். மேலும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்களை நாம் வெற்றிகரமாக செலுத்தினால், அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு பிரான்ஸுக்கோ அல்லது வேறு எங்குமோ போகத் தேவையில்லை. நாமே அதைச் செய்து கொள்ள முடியும். வணிக ரீதியில் பிற நாடுகளின் செயற்கைக் கோள்களையும் ஏவ முடியும்.

இப்படி பல்வேறு கனவுகளுடன் காத்திருக்கும் இந்தியாவுக்கு ஜிஎஸ்எல்வியின் தொடர்ச்சியான 2வது தோல்வி பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

English summary
The crucial GSLV-F06 mission, which was to put India"s heaviest communication satellite GSAT-5P in orbit, was destroyed after the controllability of the vehicle was lost 47 seconds after lift-off from the Satish Dhawan Space Centre here. Talking to reporters, ISRO Chairman K Radhakrishnan said yesterday the vehicle took off as scheduled at 1604 hrs, but it soon lost the controllability after 47 seconds leading to its destruction.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X