வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து ரூ. 400 கோடியை சுருட்டிய சிட்டி வங்கி ஊழியர்

Subscribe to Oneindia Tamil

City Bank
டெல்லி: மிகப் பெரிய அளவிலான ஒரு வங்கி மோசடி ஹரியானா மாநிலம் கர்கானில் நடந்துள்ளது. அங்குள்ள சிட்டி வழங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், வங்கிக் கணக்குகளிலிரு்து ரூ. 400 கோடியை தனது பெயருக்கு மாற்றி பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

மொத்தம் 20 கணக்குகளிலிருந்து பணத்தை எடுத்து அவர் இந்த மோசடியைச் செய்துள்ளார். இதுதொடர்பாக சிட்டி வங்கி சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து சிட்டி வங்கி செய்தித் தொடர்பாளர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில், கர்கான் கிளையில் சில கணக்குகளில் முறைகேடாக பணம் எடுக்கப்பட்டிருப்பது குறித்து புகார் வந்ததும் நாங்கள் விசாரணையைத் தொடங்கினோம். அதில்தான் இந்த நிதி மோசடி குறித்த விவரம் தெரிய வந்தது.

சிவராஜ் பாட்டீல் என்ற ஊழியர்தான் இதைச் செய்ததாக கண்டுபிடித்துள்ளோம். பல்வேறு வாடிக்கையாளர்களை அணுகி கவர்ச்சிகரமான திட்டங்கள் இருப்பதாக கூறி முதலீடு செய்ய வைத்து அந்தப் பணத்தையெல்லாம் இவர் சுருட்டியுள்ளார். அநத்ப் பணத்தை எடுத்து வேறு சில கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்துள்ளார்.

இப்படியாக 20 வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ. 400 கோடி வரை சுருட்டியுள்ளதை கண்டுபிடித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

சிட்டி வங்கியின் அறிவிப்புகள் என்று கூறி மோசடியான திட்ட அறிவிப்புகளை இவரே அச்சிட்டு அதை வாடிக்கையாளர்களிடம் காண்பித்து முதலீடு செய்யத் தூண்டியுள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் செபியின் நோட்டீஸைப் போல போலியான ஒன்றையும் தயாரித்து இவர் வாடிக்கையாளர்களை ஏமாற்றிப் பணம் கறந்துள்ளார்.

தற்போது இந்த வழக்கை கர்கான் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 420, 467, 468 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+