For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் 1000 வெடிகுண்டு லாரிகள் ஊடுறுவல்-தீவிரவாதிகள் சதி-தமிழகத்தில் உஷார் நிலை

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும் பெரும் நாச வேலைகளை நிகழ்த்தி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 1000 லாரிகள் ஊடுறுவியுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தாவூத் இப்ராகிமின் இந்தத் திட்டத்தை அவனது கூட்டாளியான சோட்டா ஷகீல் நிறைவேற்ற திட்டமிட்டு வருவதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.

சமீபத்தில் 2 லாரி டிரைவர்கள் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கினர். அவர்கள்தான் இத்தகவலைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் லஷ்கர் இ தொய்பாவிடம் பயிற்சி பெற்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

தங்களது சதித் திட்டத்திற்காக பல லாரி டிரைவர்களை தீவிரவாதிகள் பிடித்திருப்பதாகவும், இந்த லாரிகள் ஆங்காங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

புத்தாண்டையொட்டி தீவிரவாத தாக்குதல் நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட அனைத்து பெருநகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்ப்பட்டுள்ளது.

ஏற்கனவே லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் ஊடுறுவியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதுவரை பிடிபடவில்லை. அதேபோல பெங்களூரிலும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

தற்போது லாரிகள் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து நாடு முழுவதும் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் லாரிகள் போக்குவரத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். அனைத்து சாலைகளிலும் லாரிகளை தீவிரமாக போலீஸார் சோதனையிடுகின்றனர்.

English summary
Dawood Ibrahim gang has planned to hold terror attacks in India through explosive laden lorries. Recently 2 lorry drivers were arrested. They informed that, nearly 1000 explosives laden lorries are stationed in many part of the country. During the new year celebrations the terrorists may use this to attack the people. In TN all the lorries are brought under Police scanner. Vehicle cheks are heightened in highways. Security beefed up in all major cities, DGP Letika Saran told
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X