For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஜ்மல் கசாப்பை புனே ஏரவாடா சிறைக்கு மாற்ற முடிவு

By Chakra
Google Oneindia Tamil News

Kasab
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் தீவிரவாதி அஜ்மல் கசாப் தாக்கல் செய்த அப்பீல் மனு மீது வரும் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடாக கசாப்பை மும்பையிலிருந்து புனேவில் உள்ள எரவாடா சிறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி கசாப்புக்கு தனி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளான். வரும் 21ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இப்போது மத்திய மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
அங்கு அவனுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந் நிலையில் கசாப்பை எரவாடா சிறைக்கு மற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து எரவாடா சிறையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

எரவாடா சிறை மகாராஷ்டிர மாநிலத்தில் மிகப் பெரிய ஜெயிலாகும். இந்தச் சிறையில் குற்றவாளிகளை தூக்கில் போடவும் வசதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Pakistani terrorist Ajmal Kasab who is awaiting confirmation of death sentence from the Bombay HC expected on Monday, will soon be shifted to Pune’s Yerwada jail, most probably within a month after all the legal formalities at the HC are over.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X