For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணையில் பங்கேற்க ராசாவுக்கு அனுமதி

Google Oneindia Tamil News

Raja
டெல்லி: வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணையில் ஆஜராக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஏ.ராசாவுக்கு டெல்லி கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

விசாரணைக் கைதிகளுடன் ஒருவராக போலீஸ் வேனில் கூட்டத்தோடு கூட்டமாக கூட்டிச் செல்லப்படும் நிலை இருப்பதால், தன் மீதான விசாரணையை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடத்த வேண்டும். அதற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரி ராசா மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த டெல்லி சிபிஐ கோர்ட், அக்கோரிக்கையை ஏற்றுள்ளது.

ராசாவை கடந்த பிப்ரவரி 2ம் தேதி சிபிஐ கைது செய்தது. பல நாள் விசாரணைக்குப் பின்னர் திகார் சிறையில் ராசா அடைக்கப்பட்டார். மார்ச் 3ம் தேதி வரை அவருக்கு சிறைக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வீடியோ கான்பரன்ஸ் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், மார்ச் 3ம் தேதி ராசா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட மாட்டார். மாறாக சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் கோர்ட் விசாரணையில் பங்கேற்பார்.

ராசாவுடன் சேர்த்து ஸ்வான் டெலிகாம் பிரமோட்டர் ஷாஹித் உஸ்மான் பல்வா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பஹுரா, ராசாவின் தனி செயலாளர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A Delhi court today allowed former Telecom Minister A Raja's plea to appear before it via video-conferencing. Wary of being transported with under-trials in a crowded jail van, A Raja had moved a plea to conduct judicial proceedings through video-conferencing in the 2G spectrum allocation scam case. Raja is in Tihar Jail, under judicial custody till March 3, along with Swam Telecom promoter Shahid Usman Balwa, former Telecom Secretary Siddhartha Behura and his personal secretary R K Chandolia. Raja was arrested by the Central Bureau of Investigation (CBI) on February 2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X