For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அல்லாடும் காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் குழு தொழிலாளர்கள் : புதிய வேலை கிடைப்பதில் சிரமம்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஒருங்கிணைப்புக் குழுவில் பணிபுரிந்தவர்கள் புதிய வேலை வாங்க அல்லல்படுகின்றனர். அவர்கள் வேலை தேடி எங்கு சென்றாலும் அவர்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வியே உங்கள் மீதான சிபிஐ விசாரணை முடிந்துவிட்டதா? என்பது தான்.

காமன்வெல்த் போட்டிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் ஊழல் இந்தியா மட்டுமல்ல உலகம் அறிந்த ஒன்று. அன்மைக் காலமாக ஒருங்கிணைப்புக் குழுவில் பணியாற்றிய ஒவ்வொருவரிடமும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் காமன்வெல்த் போட்டிகள் ஒருங்கிணைப்புக் குழுவில் பணியாற்றியவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய வேலைக்கு செல்லும் இடத்தில் காமன்வெல்த் என்ற பெயரைக் கேட்டதுமே முதலாளிகள் பீதி அடைகின்றனர். முதலில் முந்தைய பணி தொடர்பாக சிபிஐ விசாரணை எதுவும் பாதியில் நிற்கவில்லை என்று சான்றிதழ் வாங்கி வரும்படி கூறுகிறார்கள். இதனால் அவர்கள் சான்றிதழ் வாங்க இங்கும், அங்கும் அல்லாடுகின்றனர்.

அவர்கள் தங்கள் குறைகளைக் கூற ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகளைத் தேடினால் கிடைப்பதே இல்லை என்று புலம்புகிறார்கள். மேலும், எந்த வித அறிவிப்போ, நஷ்ட ஈடோ இன்றி அனைவருக்கும் வேலை பறிபோனதாக புகார் கூறுகின்றனர். மனித நேயமே இல்லாமல் திடீர் என்று எங்களை பணியில் இருந்து நீக்கிவிட்டனர் என்று ஆதங்கப்படுகின்றனர்.

English summary
CWG OC workers are having a tough time as they were issued pink slip without any prior intimation. Now they are running from pillar to post to get a new job. The mere mention of CWG scares the new employers who ask them to get a character certificate saying that there is no pending CBI inquiry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X