For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக கூட்டணியில் சீட் இல்லை-புதிய பாரதம் தனித்து் போட்டியிட முடிவு

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணியில் போட்டியிட சீட் ஒதுக்கப்படாததால் அதிருப்தி அடைந்துள்ள புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலித் கட்சி புதிய பாரதம். இதன் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி. இவர் கடந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் அரக்கோணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் வரும் தேர்தலில் தனது கட்சிக்கு கூடுதல் இடம் வேண்டும் என்று கோரி வந்தார் மூர்த்தி.ஆனால் கூடுதல் இடம் தர திமுக மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து வருகிற தேர்தலில் தங்களது கட்சி தனித்துப் போட்டியிடும் என மூர்த்தி அறிவித்துள்ளார். இதை அவரே அறிவித்துள்ளார். அரக்கோணம் அல்லது பூந்தமல்லி தொகுதியில் அவர் போட்டியிடலாம் என்று தெரிகிறது.

திமுக கூட்டணியில் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல புதிதாக கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் புதிதாக சேர்ந்துள்ளது. இதனால் பலருக்கு அதாவது குட்டிக் கட்சிகளுக்கு இடமில்லாமல் போய் விட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Puhtiya Bharatham party has decided to contest alone in assembly polls. PB was in DMK alliance, had asked for more than one seats. But DMK could not give the same, PB has decided to go alone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X