For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உணவுப் பணவீக்கம் 9.42 ஆகக் குறைந்தது

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: உணவுப் பணவீக்க அளவு 9.42 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த மூன்றரை மாதங்களில் இந்த அளவுக்கு பணவீக்கம் குறைவது இதுவே முதல் முறை.

எப்படியாவது எட்டு சதவீதத்துக்குள் உணவுப் பணவீக்கத்தைக் கொண்டு வந்துவிட வேண்டும் என முயற்சித்துக் கொண்டுள்ள அரசுக்கு, இந்த வீழ்ச்சி சற்று ஆறுதலைக் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 9.52 சதவீதமாக இருந்தது. கோதுமை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான விளைச்சல், காய்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி போன்றவை காரணமாக உணவுப் பணவீக்கம் குறைந்திருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆரம்பத்தில் 20.59 சதவீதமாக இருந்தது உணவுப் பணவீக்கம். நவம்பர் இறுதிவரை இரட்டை இலக்கத்திலேயே இருந்து வந்த உணவுப் பணவீக்கம், நவம்பர் 27-ம் தேதிதான் 8.68 சதவீதமாக இறங்கியது. ஆனால் அதே வேகத்தில் மீண்டும் உயர்ந்துவிட்டது.

மார்ச் இறுதிக்குள் உணவுப் பணவீக்கம் 7 முதல் 8 சதவாதமாகக் குறையும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Food inflation fell to a three- and-a-half-month low of 9.42 per cent for the week ended March 5 as prices of potato and pulses declined. Food inflation in the previous week was 9.52 per cent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X