For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கும் 49 ஓ படிவத்தை தேர்தலின்போது பயன்படுத்தியவர்களிடம் தமிழக காவல்துறையின் கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக சத்திய சந்திரன் என்ற வழக்கறிஞர் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,

கள்ள ஓட்டுகளை தவிர்ப்பதற்காக வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடிகளில் 49-ஒ என்ற வசதி செய்து தரப்பட்டுள்ளது. அரசியலில் நடக்கும் குற்ற நடவடிக்கைகளாலும், லஞ்ச ஊழல் விவகாரங்களாலும், யாருக்கும் வாக்களிக்க விரும்பாத மக்கள், 49 ஒ-வில் வாக்களிக்க முன்வருகின்றனர்.

தற்போது இப்படிப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களுக்காக வாக்குச்சீட்டிலோ அல்லது எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்திலோ வாக்களிப்பதற்கு 49-ஒ-வுக்கென்று தனி பகுதியை ஏற்படுத்துவதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது.

யாருக்கும் வாக்களிக்க விரும்பாமல் 49-ஒ பாரத்தில் வாக்களிக்க விரும்புகிறவர்களை வாக்குச்சாவடிகளில் உள்ள தேர்தல் ஏஜெண்டுகள் எளிதாக அடையாளம் காண்கின்றனர். அவர்கள் ரகசியமாக ஓட்டளிக்கும் முறை ஏற்படுத்தித் தரப்படவில்லை. எனவே வாக்களிப்பதில் உள்ள ரகசியம், பாதுகாப்பு போன்றவை கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் 49-ஒ-வுக்கு வாக்களிக்கும் முறை பற்றி வாக்குச்சாவடி அதிகாரிகள் பலருக்கு சரிவரத் தெரியவில்லை. இதனால் 49-ஒ-க்கு வாக்களிக்க வருகிறவர்கள் கூட, வேட்பாளர் யாருக்காவது ஓட்டுப்போடும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனர்.

நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் 24 ஆயிரத்து 591 பேர் 49-ஒ-க்கு வாக்களித்துள்ளனர். ஆனால் இதில் வாக்களிப்பதற்கு பலர் வாக்குச்சாவடி அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளனர். இது சுதந்திரமாகவும், பயமின்றியும் வாக்களிப்பதற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

இந்த நிலையில் 49-ஒ-வுக்கு வாக்களித்தவர்களை கியூ பிரிவு போலீசார் தேடிப்பிடித்து விசாரிக்கின்றனர். இவர்களுக்கு நக்சலைட் அமைப்புகளுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் விசாரிப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக 49-ஒ வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். இது அடிப்படை உரிமைகளை மீறுவது போன்றதாகும். இந்த தனிப்பட்ட விவரங்களை கியூ பிரிவு போலீஸாருக்கு தேர்தல் அதிகாரிகள் அளித்து வருகின்றனர்.

இவர்கள் தேர்தல் கமிஷனுக்குத்தான் இது போன்ற விவரங்களை அளிக்க வேண்டுமே தவிர, வேறு யாருக்கும் கொடுப்பதக்கு விதிமுறையில் இடமில்லை. மேலும் இந்த விவரங்களை அளிப்பதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு அளிக்கவில்லை.

மேலும் இவர்களை இப்படி கியூ பிரிவு போலீசார் துன்புறுத்தினால் இவர்கள் இனிமேல் 49 ஓ-வுக்கு வாக்களிக்க அச்சப்படுவார்கள். இது மறைமுகமாக 49-ஓ உரிமையை தடை செய்வது போன்றதாகும்.

எனவே 49-ஓ-வுக்கு வாக்களித்த வாக்காளர்களின் விவரங்களை போலீசார் சேகரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் அவர்களை துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் சத்திய சந்திரன்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தலைமை தேர்தல் அதிகாரி, டி.ஜி.பி. மற்றும் கியூ பிரிவு எஸ்.பி. ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், அதுவரை 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்தவும் கோர்ட் தடை விதித்தது.

English summary
The Madras High Court has restrained TN Police from collecting booth wise details of electorate who exercised their option not to vote under Rule 49-O in the recent assembly elections. A bench comprising Chief Justice M Y Eqbal and Justice T S Sivagnanam gave the interim order on a PIL petition seeking to forebear police authorities from collecting personal details and "harassing" the electorate who exercised the option not to vote in favour of any of the contestants. It also directed the state Chief Electoral Officer to file the counter to the petition by one S Sathiachandran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X