For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'விவசாயி' செங்கோட்டையனுக்கு வேளாண்துறை: மகிழ்ச்சியில் கோபி

By Siva
Google Oneindia Tamil News

கோபி: செங்கோட்டையன் வேளாண்துறை அமைச்சராக பதவியேற்கவிருப்பது கோபிச்செட்டிப்பாளையம் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செங்கோட்டையன்

கோபியின் மண்ணின் மைந்தரான செங்கோட்டையனுக்கே அதிமுக சார்பில் போட்டியிட அத்தொகுதி ஒதுக்கப்பட்டது. அவரை எதிர்த்து கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் என்.எஸ். சிவராஜன் நிறுத்தப்பட்டார். இருவரும் உள்ளூர்க்காரர்கள், ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வெற்றிக்கனி யாருக்கு என்பதில் இறுதிவரை குழப்பம் நிலவியது.

அபார வெற்றி

ஆனால் 94 ஆயிரத்து 872 வாக்குகள் பெற்று என்.எஸ். சிவராஜனை 41 ஆயிரத்து 912 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் செங்கோட்டையன். அம்மாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதோடு, தேமுதிகவுடனான கூட்டணி அமைய முக்கியக் காரணமாக இருந்தவர். இதனால் அவருக்கு நிச்சயம் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று உள்ளூர் கட்சிக்காரர்களின் நம்பினார்கள்.

வேளாண்துறை

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ஜெயலலிதாவின் அமைச்சரவைப் பட்டியலில் வேளாண்துறை செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயக் குடும்பத்தில் பிறந்த, இன்னும் விவசாயம் பார்த்து வருகிற செங்கோட்டையனுக்கு இப்பதவி கிடைத்தது கோபிச்செட்டிப்பாளையம் பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோபி மக்கள் செங்கோட்டையனுக்கு பாராட்டு விழாக்கள் நடத்த தயாராகி வருகின்றனர்.

செங்கோட்டையனின் மனைவி பெயர் ஈஸ்வரி. இந்தத் தம்பதிக்கு ஒரே மகன். பெயர் கதிர். கோவையில் தொழிலதிபராக இருக்கிறார் கதிர்.

1967ம் ஆண்டு முதல் முறையாக குள்ளம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தலைவரானார் செங்கோட்டையன். அன்று முதல் அதிமுகவில் இவர் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். ஜெலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்.

1977-ல் அதிமுக சார்பில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். தொடர்ந்து 1980, 1984 ஆகிய இரு சட்டசபைத் தேர்தல்களில் அதிமுக சார்பிலும், 1989-ல் ஜெயலலிதா அணி சார்பிலும், 1991 மற்றும் 2006 தேர்தல்களில் தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்.

2001 பேரவை தேர்தலில் வழக்கு நிலுவை காரணமாக அவர் போட்டியிடவில்லை. 7வது முறையாக செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். அமைச்சராவது இது 2வது முறை.

1991 தேர்தலில் வெற்றி பெற்று போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

English summary
Jayalalitha has announced that Sengottaiyan of Gobi legislative assembly will be the agriculuture minister of Tamilnadu. People of Gobi are very happy on hearing this news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X