For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறப்புத்திட்ட அமலாக்க அமைச்சரான எஸ்.பி.வேலுமணி: அம்மா கொடுத்த பரிசு

By Siva
Google Oneindia Tamil News

கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற எஸ்.பி.வேலுமணி சிறப்புத்திட்ட அமலாக்க அமைச்சராகிறார்.

எஸ்.பி.வேலுமணி

கடந்த சட்டசபை தேர்தலில் குனியமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணிக்கு இந்த தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

அபார வெற்றியும், அமைச்சர் பதவியும்

தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் எம்.என். கந்தசாமியை 53 ஆயிரத்து 203 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடையச் செய்தார் வேலுமணி. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த வேலுமணி “கோவை அதிமுகவின் கோட்டையாகவே மாறிவிட்டது. இந்த பிரம்மாண்டமான வெற்றிக்கு உரிய பரிசை அம்மா வழங்குவார்" என சூசகமாக தெரிவித்தார்.

இன்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அமைச்சர்கள் பட்டியலில் எஸ்.பி. வேலுமணியும் இடம் பெற்றுள்ளார். அவருக்கு சிறப்புதிட்ட அமலாக்கத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

English summary
Jayalalitha has released the list of new ministers today. Thondamuthur legislative assembly member S.P. Velumani has got special plan execution ministry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X