For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. இருக்குமிடத்தில் செருப்பு அணியாத அமைச்சர்-கேட்டால் 'அம்மா' இருக்குமிடம் கோவில் என்கிறார்!

By Chakra
Google Oneindia Tamil News

RP Udayakumar
சென்னை: முதல்வர் ஜெயலலிதா இருக்குமிடம் கோவில் என்றும், இதனால் ஜெயலலிதாவின் வீடு, அவர் பணியாற்றும் தலைமைச் செயலகம், சட்டசபை ஆகிய இடங்களில் செருப்பே அணியாமல் தவிர்த்து வருகிறார் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

தமிழக சட்டசபைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நேற்று பதவியேற்றபோதும் அவர் செருப்பு அணியாமல் தான் வந்தார்.

இது குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், கோவிலுக்குள் எப்படி செருப்பு அணிந்து செல்லக் கூடாதோ அதேபோல, முதல்வர் ஜெயலலிதா இருக்கும் இடத்தில் நான் செருப்பு அணிந்து செல்ல மாட்டேன்.

அம்மா இருக்கும் இடம் தான் எனக்குக் கோவில். எனவே அம்மாவின் வீடு, அவர் ஆட்சி செய்யும் தலைமைச் செயலக வளாகம், இப்போது பதவி ஏற்ற சட்டப்பேரவை என எந்த இடத்திலும் நான் செருப்பு அணிவதில்லை.

கடந்த ஒரு வார காலமாக தலைமைச் செயலகத்தில் செருப்பு அணியாமல்தான் பணிகளை கவனித்து வருகிறேன் என்றார்.

அதே போல நேற்று பதவியேற்ற கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏவான காமராஜ், தனது காலணியைக் கழற்றி வைத்துவிட்டு முதல்வர் ஜெயலலிதாவின் இருக்கையை நோக்கி வணக்கம் தெரிவித்துவிட்டு பின்னர் தான் உறுதிமொழி ஏற்றார்.

தமிழகத்தின் ஐ.டி. அமைச்சராக இருந்து கொண்டு 'ஐஸ்' என்ற பெயரில் உதயகுமாரின் செயல்பாடு கொஞ்சம் ஓவராகவே உள்ளது.

English summary
TN IT minister avoids wearing chappal beforelalithaa as he calls her as god and place she dwell is temple
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X