For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்து தொடங்கியது

By Chakra
Google Oneindia Tamil News

Ship
தூத்துக்குடி: தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது.

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஸ்கார்டியா பிரின்ஸ் என்ற 9 அடுக்கு கொண்ட பிரமாண்ட சொகுசு கப்பல் தனது முதல் பயணத்தை இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கியது.

முதல் கப்பலில் 200 பயணிகள் கொழும்புக்குப் புறப்பட்டுச் சென்றனர். மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கப்பல் சேவையை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் இருந்து கொழும்புவுக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கும், பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு இந்தியா-இலங்கை அரசுகள் புரிந்துணர்வு ஓப்பந்தம் செய்துள்ளன.

அதில், தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்குகியது. தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள பயணிகள் முனைமத்தில் வைத்து அன்று மாலை 4 மணிக்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜிகே வாசன் கொடியசைத்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினை தொடங்கி வைத்தார்.

இந்த சேவையில் ஸ்கார்டியா பிரின்ஸ் என்ற சொகுசு கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த பிளமிங்கோ டூயூட்டி பெய்டு ஷாப் என்ற நிறுவனம் பயணிகள் கப்பலை இயக்குவதற்கான அனுமதியை பெற்றுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ராஜா ஏஜென்சிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் பயணிகள் ஏற்றும் மற்றும் இறக்கும் பணிகளை செய்ய உள்ளது.

தூத்துக்குடியில் இருந்து 152 கடல் மைல் தொலைவில் உள்ள கொழும்வுக்கு இந்த கப்பல் 12 மணியிலிருந்து 14 மணி நேரத்திற்குள் சென்று சேரும்.

தூத்துக்குடியில் இருந்து திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த கப்பல் மறுநாள் காலை 8 மணிக்கு கொழும்புவை சென்றடையும்.

கொழும்புவிலிருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுகிழமை மாலை 6 மணிக்கு கிளம்பும் கப்பல் மறுநாள் காலை 8 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேரும்.

English summary
The much awaited passenger ferry service between India and Sri Lanka will be flagged off by Union Shipping Minister G.K. Vasan today at Tuticorin port. The ship “Scotia Prince” would be operated twice a week to Colombo from Tuticorin by Flemingo Liners
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X