ஜெயலலிதாவை சந்தித்துப் பேசுவேன்: அன்புமணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மது குடித்து வாகனம் ஓட்டாமல் இருப்பது, ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்குவது, சீட் பெல்ட் அணிவது, போக்குவரத்து விதி முறையை கடுமையாக்குவது ஆகியவற்றை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதுவேன். தேவைப்பட்டால் நேரிலும் சந்தித்து பேசுவேன் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.

பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசார மனித சங்கிலி சென்னை கடற்கரையில் இன்று நடந்தது. இந்த மனித சங்கிலி பிரசாரத்தை துவக்கி வைத்த முன்னாள் மத்திய அமைச்சரும் பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி நிருபர்களிடம் பேசுகையில்,

பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் 17 ஆண்டுகளாக பொதுப் பிரச்சனைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த ஆண்டு சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடத்துகிறோம். உலக அளவில் இந்தியாவில் தான் அதிக அளவு சாலை விபத்து நடக்கிறது.

இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் சாலை விபத்து மரணம் நிகழ்கிறது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 15 ஆயிரம் பேர் சாலை விபத்தில் பலியாகி உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் ஆவார்கள்.

40 சதவீத சாலை விபத்துக்கு காரணம் மது என்று தெரிய வந்துள்ளது. எனவே மது குடித்து வாகனம் ஓட்டாமல் இருப்பது, ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்குவது, சீட் பெல்ட் அணிவது, போக்குவரத்து விதி முறையை கடுமையாக்குவது ஆகியவற்றை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதுவேன். தேவைப்பட்டால் நேரிலும் சந்தித்து பேசுவேன் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
I will meet CM Jayalalithaa to apprise her about road safety measures, said PMK leader Anbumani
Please Wait while comments are loading...