ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
EVKS Elangovan
கோபி: உள்ளாட்சித் தேர்தலில் ஊழல் கட்சியான திமுகவுடன் எக்காரணம் கொண்டும் நாம் கூட்டணி வைக்கக் கூடாது என்று, முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

ஈரோடு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் நடந்தது. அதில் பேசிய அவர்,

திமுகவுடன் கூட்டணி சேர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டதால்தான் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும். அல்லது திமுக அல்லாத வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கலாம்.

காந்தி, நேரு, காமராஜர் போன்ற எண்ணற்ற தலைவர்கள் செய்த தியாகம் தான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பாரம்பரியமும், வரலாறும் உள்ளது.

நாட்டுக்காக காங்கிரஸ் கட்சியினர் சிறை சென்றனர். ஆனால், கோடி கோடியாக ஊழல் செய்துவிட்டு திமுகவினர் சிறைக்குச் செல்கின்றனர்.

கட்சியில் யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் மரபு காங்கிரஸ் கட்சியில் உள்ளது. காமன் வெல்த் போட்டியில் ஊழல் என்று சொல்லப்பட்டதுமே காங்கிரஸ் அமைச்சர் சுரேஷ் கல்மாடியை அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கியது காங்கிரஸ்.

ஆனால், 2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் தவறு செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்களை காப்பாற்றுவதிலேயே திமுக குறியாக உள்ளது.

ஆட்சி அதிகாரத்தில், கோடி கோடியாக கொள்ளை அடித்த திமுகவுடன், சட்டசபை தேர்தலில் நாம் கூட்டணி சேர்ந்ததை மக்கள் ஏற்கவில்லை. அதுமட்டுமா, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் நின்ற தொகுதிகளில் திமுகவினரே திட்டமிட்டு தோற்கடித்தனர் என்றார்.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில்
ஊழல் கட்சியான திமுகவுடன் எக்காரணம் கொண்டும் நாம் கூட்டணி வைக்கக் கூடாது. தனித்து போட்டியிட்டு, நமது பலத்தை காட்ட வேண்டும். திமுக தவிர வேறு எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அதை வரவேற்போம் என்றார்.

கூட்டத்தில் பேசிய மாவட்ட நிர்வாகிகள் பலரும், காலியாக உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பொறுப்புள்ள தொண்டர்களை வழிநடத்தும் ஆற்றல் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களை தலைவராக நியமிக்க வேண்டும் என்று பேசினார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Congress has faced rout in the Assembly elections in the State only because of its ties with DMK, former union minister EVKS Elangovan has said. Addressing the party cadre at Gobi, Elangovan said the Congmen were victimised in the poll for the sins committed by the DMK”. Only because of our friendship with DMK, we faced rout. Hence, hereafter, we should not maintain ties with DMK.
Please Wait while comments are loading...