For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிந்தித்து செயல்பட்டிருந்தால் கலவரம், துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாம்-கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: போலீஸார் முன்கூட்டியே சிந்தித்து, திட்டமிட்டு செயல்பட்டிருந்தால், பரமக்குடியில் நடந்த கலவரம், அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூடு போன்றவற்றை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இம்மானுவேல் சேகரனின் 54-வது நினைவு நாளினையொட்டிய நிகழ்ச்சிகள் பரமக்குடியில் நேற்று நடை பெற்றிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சாலை மறியல், கலவரம் இவற்றின் காரணமாக காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிர் இழந்திருப்பதாகவும், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 75 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தலைவர் ஜான்பாண்டியன் பரமக்குடி வந்தால் வன்முறை நிகழலாம் என்று கருதி, அவருடைய வருகைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததையொட்டி, ஜான்பாண்டியனும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டதின் தொடர்ச்சியாகவே, கலவர நிகழ்வுகள் பரமக்குடியிலும் மதுரையிலும் நடைபெற்றிருக்கின்றன.

ஜான்பாண்டியனை பரமக்குடிக்கு வர அனுமதித்திருந்தால் என்ன நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும், அவர் வருவதைத் தடை செய்து, கைது செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையெல்லாம் முன் கூட்டியே சிந்தித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தால், கலவரம்-துப்பாக்கிச்சூடு போன்ற வேண்டத்தகாதவற்றைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

நடைபெற்று விட்ட நிகழ்ச்சிகள் குறித்து உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று பல்வேறு கட்சித்தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள். அந்தக் கோரிக்கை அலட்சியப்படுத்தப்படக் கூடியதல்ல. எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு, எதிர்காலத்திலாவது இது போன்ற சம்பவங்கள் ஏற்படாதவாறு ஆட்சியினர் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழந்த இரங்கலையும், காயமடைந்தோருக்கு என்னுடைய அன்பான ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.

வள்ளுவர் குறள் கேட்டு வழக்கம் போல வெளியேறிய திமுக எம்.எல்.ஏக்கள்!:

இந் நிலையில் வழக்கம் போல சபாநாயகர் ஜெயக்குமார் திருக்குறள் வாசித்ததை கேட்டு விட்டு திமுக எம்.எல்.ஏக்கள் இன்று நான்காவது நாளாக வெளிநடப்புச் செய்தனர்.

சட்டசபைக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் நூதன முறையில் வெளிநடப்பு செய்து வருகின்றனர். அதாவது சட்டசபைக்கு அவர்கள் தினமும் வருகிறார்கள். சபாநாயகர் திருக்குறள் வாசித்து பொருள் கூறி முடிக்கும் வரை அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். குறள் வாசித்து முடிந்ததும் அமைதியாக வெளியேறி விடுகின்றனர். இப்படியே 3 நாட்களாக இவர்கள் செய்துவருகிறார்கள். இன்று நான்காவது நாளாகவும் இதேபோல வெளிநடப்புச் செய்தனர்.

சட்டசபையில் தங்களுக்கு பேச சபாநாயகர் அனுமதி தருவதில்லை. தங்களைப் பற்றி கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க அனுமதி தருவதில்லை. எங்களது குரலை ஒலிக்க விடாமல் செய்கிறார்கள். எனவே தான் காதுக்கு இனிய திருக்குறளை கேட்டு விட்டு வெளியேறுகிறோம் என்று இந்த நூதன வெளிநடப்புக்கு திமுகவினர் காரணம் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
DMK president Karunanidhi has condoled the death of 7 Dalits in Paramakudi police firing. He
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X