மோனிகா லெவின்ஸ்கியை சமாளிப்பது எப்படி?-ஜாப்ஸிடம் அட்வைஸ் கேட்ட கிளிண்டன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Monica Lewinsky
சான்பிரான்சிஸ்கோ: மோனிகா லெவின்ஸ்கியுடனான சிக்கலின்போது, அவரை சமாளிப்பது எப்படி என்பது குறித்து தன்னுடன் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஆலோசனை கேட்டதாக ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார். நாளை வெளியாகவுள்ள ஜாப்ஸின் நூலில்தான் இந்த பரபரப்புத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீவ் ஜாப்ஸ் சமீபத்தில் மரணமடைந்தார். அவரது சுயசரிதை தற்போது விற்பனைக்கு வருகிறது. நாளை அது விற்பனைக்கு விடப்படுகிறது. இந்த நிலையில், ஜாப்ஸின் தனிப்பட்ட வாழ்ககை குறித்த பல சுவாரஸ்யமான பரபரப்பான தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக மோனிகா லெவின்ஸ்கி-கிளிண்டன் விவகாரம் குறித்தும் அதில் கூறப்பட்டுள்ளது. 1998ம் ஆண்டு அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலகையே பரபரப்பில் ஆழ்த்திய விவகாரம் கிளிண்டன்-மோனிகா லெவின்ஸ்கி விவகாரம்.

,ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற பெயரில் வால்டர் ஐசக்சன் எழுதியுள்ள இந்த நூலில் மோனிகா விவகாரம் குறித்து ஜாப்ஸ் கூறுகையில், மோனிகா லெவின்ஸ்கியுடன் பில் கிளிண்டன் தொடர்பு வைத்திருந்த காலத்தில் அது தொடர்பாக என்னிடம் தனிப்பட்ட முறையில் யோசனை கேட்டார் பில். பலமுறை இரவு நெடு நேரம் கழித்து கூட அவர் பேசுவார். அவர் முழுமையாக எதையும் என்னிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் சொல்ல வேண்டியதை மட்டும் என்னிடம் சொல்லியிருந்தார்.

அவர் கூறியதைக் கேட்டுக் கொண்ட நான், நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது குறித்து எனக்குத்தெரியவில்லை. ஆனால் என்ன செய்தீர்களோ, அதை நாட்டு மக்களுக்குத் தெரிவித்து விடுங்கள். அதுதான் பொருத்தமானதாக இருக்கும். அதைக் கேட்டதும் கிளிண்டனிடமிருந்து சிறிது நேரம் பதில் வரவில்லை. பின்னர் இந்த விவகாரம் பெரிதாகிப் போனது என்று கூறியுள்ளார் ஜாப்ஸ்.

புற்று நோயைக் குணமாக்க மன நோய் நிபுணரிடம் போன ஜாப்ஸ்

இந்த நூலில், புற்றுநோயுடன் தான் போராடியதை உருக்கமாகவும், அதேசமயம் நகைச்சுவையாகவும் தெரிவித்துள்ளார் ஜாப்ஸ். தனக்குத் தேவைப்பட்ட அறுவைச் சிகிச்சையை 9 மாத காலத்திற்குத் தள்ளிப் போட்டதற்காக வருத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

2003ம் ஆண்டு தனக்கு கணையப் புற்றுநோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறியுள்ள ஜாப்ஸ், அப்போது வந்த கட்டியை உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்திருக்கலாம். ஆனால் நான் தேவையில்லாமல் அதைத் தள்ளிப் போட்டு விட்டேன். இன்டர்நெட்டில் பார்த்த மூலிகை மருத்துவம், உணவுக் கட்டு்பபாடு, அக்குபங்சர் உள்ளிட்டவற்றை நான் பரிசோதித்துப் பார்த்தேன். இதனால் காலதாமதமாகி கட்டி பெரிதாகி விட்டது. ஒரு மன நோய் மருத்துவரைக்க கூட சந்தித்தேன் என்றால் எனது அறியாமையை புரிந்து கொள்ளுங்கள்.

இன்னும் ஒரு டாக்டரிடம் போனபோது, நிறைய ஜூஸ் குடியுங்கள் சரியாகி விடும் என்றார். இன்னும் நிறைய வழிகளைக் கூறினார். எல்லாம் ஹம்பக் ஆகி விட்டது. கடைசியாக 2004ம் ஆண்டுதான் அறுவைச் சிகிச்சைக்குப் போனேன். எனக்கு எனது உடலை அறுவைச் சிகிச்சை செய்து இன்னொருவர் பார்ப்பது பிடிக்கவில்லை. இதனால்தான் உலகில் உள்ள பிற வழிகளையெல்லாம் சோதித்துப் பார்க்க விரும்பினேன். கடையில் எனக்குப் பிடிக்காததுதான் நடந்தது. ஆனால் அதை முதலிலேயே செய்திருக்க வேண்டும். அதற்காக இப்போது வருந்துகிறேன் என்று கூறியுள்ளார் ஜாப்ஸ்.

தனது 56வது வயதில் அக்டோபர் 5ம் தேதி ஜாப்ஸ் மரணமடைந்தார் என்பது நினைவிருக்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As the highly-anticipated biography of late Apple co-founder Steve Jobs readies to hit the shelves on Monday, new details have emerged on the man's hitherto-unknown personal life. In a explosive revelation of sorts, Jobs was reportedly approached by former US President Bill Clinton seeking advice on handling the Monica Lewinsky scandal in 1998. "Steve Jobs" by Walter Isaacson, to be published Monday, says Jobs in a late night telephonic conversation had advised Clinton after the latter's affair with Lewinsky became public. "I don't know if you did it, but if so, you've got to tell the country", Jobs told Clinton. The biographer then says that there was "silence on the other end of the line" after the former Apple boss advised Clinton.
Please Wait while comments are loading...