For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அத்வானியின் ரத யாத்திரை இன்று மதுரை வருகை: நாளை நெல்லை பயணம்

By Siva
Google Oneindia Tamil News

Advani
மதுரை: ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிராக ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று மதுரை வருகிறார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிராக ஜன் சேத்னா யாத்திரை என்னும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த 11ம் தேதி பிகாரில் உள்ள சிதாப்தியாரா என்ற இடத்தில் இருந்து ரத யாத்திரையைத் துவங்கினார். அதை பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் துவக்கி வைத்தார்.

இந்த யாத்திரை மொத்தம் 38 நாட்கள் நடக்கிறது. கிட்டத்தட்ட 12,000 கி.மீ. தூரம் அத்வானி பயணம் செய்யவுள்ளார். தினந்தோறும் சுமார் 300 கி.மீ. தூரம் பயணம் செய்யும் அத்வானி, 23 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் யாத்திரை மேற்கொள்கிறார்.

யாத்திரையின் ஒரு பகுதியாக அவர் இன்று மதுரை வருகிறார். அவர் இன்றும், நாளையும் தமிழகத்தில் யாத்திரை மேற்கொள்கிறார். இன்று மதுரையில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இன்றிரவு மதுரையில் ஓய்வு எடுக்கிறார்.

நாளை நெல்லை செல்கிறார். நெல்லைக்கு வரும் அத்வானிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு மாவட்ட பாஜகவினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். மதியம் 2.30 மணிக்கு புளியங்குடியில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து கடையநல்லூர், தென்காசி, ராஜபாளையம், செங்கோட்டையில் பிரசாரம் செய்துவிட்டு கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்கிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

English summary
Senior BJP leader LK Advani is coming to Madurai today as part of his Jan Chetna yatra. He attends a meeting in Madurai and leaves for Tirunelveli tomorrow. He is going to Puliangudi, Tenkasi, Kadayanallur, Rajapalayam and Sengottai. From there he is going to Trivandrum.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X