For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரபு லீக்கிலிருந்து சிரியா நீக்கப்பட்டது- பொருளாதார தடை விதிக்கவும் உலக நாடுகளுக்கு அழைப்பு

Google Oneindia Tamil News

கெய்ரோ: அரபு லீக் அமைப்பு சிரியாவை தனது அமைப்பிலிருந்து நீக்கியுள்ளது. மேலும், சிரியா மீது உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதிக்குமாறும் அது அழைப்பு விடுத்துள்ளது.

அரபு ஒப்பந்தத்தை அதிபர் பாஷர் அல் அஸ்ஸாத் அமலாக்கும் வரை சஸ்பெண்ட் நடவடிக்கை தொடரும் என்றும் அரபு லீக் அறிவித்துள்ளது. மேலும் போராட்டம் நடத்துவோரை ராணுவத்தைக் கொண்டு அடக்குவதையும், ஒடுக்குவதையும் சிரியா கைவிட வேண்டும் என்றும் அரபு லீக் கூறியுள்ளது.

ஆனால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று சிரிய தூதர் யூசப் அகமது கூறியுள்ளார். அரபு லீக்குடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஏற்கனவே சிரியா அமல்படுத்தியுள்ளது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையின் பின்னால் அமெரிக்க அரசு உள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சிரியாவுக்குள் வெளிநாடுகளின் ஊடுறுவலை ஏற்படுத்த அரபு லீக் துணை போகிறது, உதவுகிறது. லிபியாவிலும் அப்படித்தான் அரபு லீக் நடந்து கொண்டது. இப்போதும் அப்படியே நடக்க அது முயலுகிறது என்றார் அவர்.

இதற்கிடையே, அரபுலீக்கின் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஐரோப்பியன் யூனியன் தலைவர் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

சிரியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் மீது படை பலத்தை சிரிய அரசு பிரயோகித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மட்டும் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி மக்கள்.

English summary
The Arab League has suspended Syria until President Bashar al-Assad implements an Arab deal to end violence against protesters, and called for sanctions and transition talks with the opposition. Syrian envoy Yussef Ahmad denounced the move as illegal, saying Damascus had already
 implemented the deal and accusing the United States of ordering the suspension. He also charged that the League was trying to "provoke foreign intervention in Syria, as was the case in Libya."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X