For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஃபீஸ் கட்டவிட்டாலும் குழந்தைகளை வெளியே அனுப்பக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்காமல் இருக்கக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள 2 பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் கே.சிவகுமார் என்பவரின் மகன் லட்சுமண குமார் முதல் வகுப்பு படித்து வருகிறார். காஞ்சீபுரம் மாவட்டம் தண்டலத்தில் உள்ள ஒரு பள்ளியில் பி.மோகன் என்பவரின் மகள் சத்யா, மகன் விஷ்ணு ஆகியோர் 6 மற்றும் 4ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த குழந்தைகள் மூவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

கல்விக் கட்டணம் செலுத்தாததால் பள்ளி நிர்வாகங்கள் அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை. இதையடு்தது சிவகுமாரும், மோகனும் பள்ளி நிர்வாகங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பால் வசந்தகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் எம். பாரி ஆஜரானார். மனுதாரர்கள் தங்கள் மனுவில், கல்விக் கட்டணம் செலுத்தாததால் எங்கள் குழந்தைகள் வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாநில அரசு அறிவித்தபடி அவர்களு்ககு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

வழக்கறிஞர் பாரி வாதாடுகையில்,

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி, 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இலவசக் கல்வி பெறும் உரிமை உள்ளது. இது அரசு உதவி பெறாத கல்விகளுக்கும் இது பொருந்தும்.

நலிவந்த வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு 25 சதவீத இடத்தை ஒதுக்கி, எந்த கட்டணமும் இன்றி கல்வி அளிக்குமாறு அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கு மாநில அரசு உத்தரவிடவில்லை என்றார்.

இந்த வழக்கு வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த 3 குழந்தைகளையும் வகுப்பறைகளுக்குள் சேர்க்குமாறும், அவர்களின் கல்விக் கட்டணைத்தை மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாநில அரசிடம் பெற்றுக் கொள்ளுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
3 SC children were denied permission in the schools as they didn't pay the school fees. Their fathers Sivakumar and Mohan has filed a case in Chennai HC against the school administration. Judge Paul Vasanthakumar has directed the 2 schools to admit the children and to collect the fees from the Tamil Nadu government under the Right of Children to Free and Compulsory Education (RCFCE) Act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X