For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண் பார்வை இழந்தவர்களுக்கு ஒரு லட்சம் இழப்பீடு – ஐகோர்ட் உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தவறான சிகிச்சை காரணமாக கண் பார்வை இழந்த 66 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் நஷ்டஈடு வழங்கவேண்டும் தனியார் கண் மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு, பெரம்பலூரைச் சேர்ந்த ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் கள்ளக்குறிச்சியில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், 66 பேரின் கண்பார்வை பறிபோனது. இதையடுத்து, நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் சி.பி.ஐ., விசாரணை செய்து அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ அறிக்கையை தாக்கல் செய்ததை அடுத்து அந்த அறிக்கையை ஆய்வு செய்த உயர்நீதிமன்றம் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட 66 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் மருத்துவமனை நிர்வாகம் நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

English summary
The Madras High Court today directed a Perambalur based private eye hospital to pay a compensation of Rs one lakh each to 66 people who became blind following treatment after a free eye camp conducted by it in 2008.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X