For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

30 மாத சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொன்சேகாவிற்கு மேலும் 3 ஆண்டு தண்டனை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Sarath Fonsheka
கொழும்பு: இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகோவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கொழும்பு உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராணுவ ரகசியத்தை வெளியிட்டதற்காகவும், பாதுகாப்பு செயலருக்கு எதிரான தகவலை தெரிவித்தாகவும் கூறி இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இறுதிக் கட்ட போர் நடைபெற்ற போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபட்ச உத்தரவிட்டதாக ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

இதனால் நாட்டுக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதாகவும், பாதுகாப்புச் செயலளருக்கும், நாட்டின் பாதுகாப்பு எதிராகவும் சரத் பொன்சேகா தகவல்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த இந்த வழக்கு கொழும்பு உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி தீபாலி விஜேந்திர தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை கடந்த ஒன்றரை வருட காலமாக விசாரணை செய்தனர். அனைத்து கட்ட விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் பொன்சேகாவை குற்றவாளி என தீர்மானித்து ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
ராணுவ நீதிமன்றம் தண்டனை

இதற்கு முன்னர் ராணுவ நீதிமன்றத்தினால் சரத் பொன்சேகாவிற்கு 30 மாத சிறைத்தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.ராணுவத்தில் கடமையாற்றிய போது அரசியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

English summary
Jailed former Sri Lankan army chief Sarath Fonseka was on Friday sentenced to spend three more years in prison after a court convicted him for alleging that the powerful brother of the country's President had ordered the execution of surrendering LTTE leaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X