For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

22 நிறுவனங்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: ப்ரீ ஸ்கூல், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் உள்ளிட்ட 22 நிறுவனங்களுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் புதிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது

மத்திய நிதி அமைச்சகம் தற்போது சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளவைகளின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 28 நிறுவனங்கள், சேவை வரிக்குள் உட்படாது என்று இருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சேவை வரிக்குள் உட்படாத சேவைகளின் எண்ணிக்கை 22 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

திருத்தி அமைக்கப்பட்டுள்ள அந்த பட்டியலின் படி மெட்ரோ, மோனோரயில், ஏசியல்லாத இரண்டாம் வகுப்பு ரயில் பயணம் செய்பவர்கள், அரசு போக்குவரத்து பேருந்துகள், டாக்சி, ஆட்டோ, ப்ரி ஸ்கூல், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்துவபர்களையும் சேவை வரி வளையத்திற்குள் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது டிசம்பர் 25ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

அலங்காரம் செய்பவர்களுக்கு சேவை வரி

மதம் தொடர்பான விழாக்கள், அரசியல் அமைப்பினர் நடத்தும் விழாக்களில் அலங்காரம் செய்பவர்களுக்கும் வரி விதிக்க வேண்டும் என்று மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறையின் தலைவர் எஸ்.கே.கோயல் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் அலங்காரம் செய்பவர்கள் அதற்கான வாடகையினை விழா நடத்துபவர்களிடம் இருந்த வருமானமாக பெற்றுக் கொள்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Non-air conditioned second class train travel, health facilities, metro and monorail, public transport buses, metered taxis and three-wheelers, preschool and recognized education providers are among services which are proposed to be kept out of the service tax net.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X