For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புவனேஸ்வரில் உலக வர்த்தக மையம்!

By Shankar
Google Oneindia Tamil News

World Trade Center
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் உலக வர்த்தக மையம் அமையவுள்ளது.

புவனேஸ்வர் நகரில் நடைபெற்ற உயர்நிலைக் குழுவில் உலக வர்த்தக மையத்தின் ஆலோசகர் ஜெயந்த் காதே மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றபோது இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயந்த் காதே கூறுகையில், "உலக வர்த்தக மையத்தின் 323 கிளைகள் 95 நாடுகளில் உள்ளன. எங்கள் நோக்கமே, ஒடிசாவில் உலக வர்த்தக மையம் அமைத்து சிறந்த சேவை அளிப்பதே. இதன் மூலம் கடல் வழி வர்த்தகப் போக்குவரத்தும் சிறப்பாக இருக்கும்," என்றார்.

உலக வர்த்தக மையம் அமைவதின் மூலம் வர்த்தகம் குறித்த தகவல், வணிகக் கல்வி, வர்த்தகம் தொடர்பான ஆராய்ச்சி, கண்காட்சி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பணிகள், தற்காலிகக் குடியிருப்பு போன்ற வசதிகள் உருவாக்கப்படும் என்று ஒடிசா மாநில தொழிற்துறைச் செயலர் டி. ராமச்சந்துரு தெரிவித்தார்.

இதற்கான விரிவான திட்ட அறிக்கையை உலக வர்த்தக மையத்திடம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் சமர்பிக்கப்படும் என்று மாநில தலைமைச் செயலர் பி.கே. பட்நாயக் தெரிவித்தார்.

English summary
World Trade Center Association has proposed to establish World Trade Center (WTC) at Bhubaneswar for promotion of International Trade & Investment in the state. The proposal was presented in a high level meeting held under the Chairmanship of Chief Secretary BIjay Kumar Patnaik in the secretariat conference hall today wherein. Jayant Ghate, Advisor, WTC along with his colleagues made the presentation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X