For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க மியூசியத்தில் ஐன்ஸ்டீனின் மூளை: ஆவலாக பார்க்க வரும் பொதுமக்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Einstein
நியூயார்க்: மறைந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை அமெரிக்க அருங்காட்சிகயத்தில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற விஞ்ஞானியாக போற்றப்பட்ட ஐன்ஸ்டீனின் மூளையை ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிக முக்கியமான விஞ்ஞானி இவர்.

புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் ஐன்ஸ்டீன் செய்துள்ளார்.

இவரது E=MC2 எனப்படும் “Theory of Relativity" சித்தாந்தம் மிகவும் பிரசித்தி பெற்றது.

நோபல்பரிசு விஞ்ஞானி

ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.

ஐன்ஸ்டீன் மூளை

ஐன்ஸ்டீன் தனது 76-வது வயதில் வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட நோயினால் 1955-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அப்போது அவரது உடலை தாமஸ் ஹார்வே என்ற டாக்டர் பிரேத பரிசோதனை செய்தார். அவரது அறிவு மிக்க மூளையை யாருக்கும் தெரியாமல் எடுத்து மறைத்து வைத்து கொண்டார்.

இதனை அறிந்த ஐன்ஸ்டீன் குடும்பத்தினர் தாமஸ் ஹார்வே மீது வழக்கு தொடர்ந்தனர். அப்போது, ஐன்ஸ்டீன் மூளையை தான் வைத்து கொள்ள அவரது மகன் அனுமதி அளித்ததாக கூறினார். இதை தொடர்ந்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இருந்தும் ஐன்ஸ்டீனின் மூளையை தானே வைத்து கொண்டார்.

முதன் முறையாக மக்கள் பார்வைக்கு

இந்த நிலையில், விஞ்ஞானியின் மூளையை ஆய்வு செய்வதற்காக நரம்பியல் விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டதை அடுத்து பல வருடங்களுக்கு பிறகு அவரது மூளையின் சில பகுதிகளை பரிசோதனைக்காக நரம்பியல் விஞ்ஞானிகளுக்கு வழங்கினார்.

தற்போது மூளையின் 46 மெல்லிய அடுக்குகள் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிலடெல்பியாவின் முட்டர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐன்ஸ்டீனின் மூளையை லென்ஸ் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

20 முதல் 50 மைக்ரான் அளவு கொண்ட இந்த மூளையின் துகள்களை லென்ஸ் மூலமாகத்தான் பார்க்க முடியும். 20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற மூளை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடையது. இது இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது பெருமைக்குரியது என்கின்றனர் அருங்காட்சியக நிர்வாகிகள்.

முதன் முறையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஐன்ஸ்டீனின் மூளையை எண்ணற்றோர் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

English summary
If you've ever wondered what the brain of a genius looks like, make your way to Philadelphia. There, the public can view for the first time 46 slivers of the brain of Albert Einstein, the theoretical physicist who developed the Theory of General Relativity. The brain is on display at Philadelphia's Mütter Museum and Historical Medical Library, in a whirlwind exhibit built in about nine working days, according to museum curator Anna Dhody.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X