For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரோமானிய மன்னராகிறார் இளவரசர் சார்லஸ்?

By Siva
Google Oneindia Tamil News

Prince Charles
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ரோமானியாவின் மன்னராகக்கூடும் என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் பட்டத்து இளவரசர் சார்லஸ்(63). ராணிக்கு அடுத்து சார்லஸின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் மன்னராகவே மக்கள் விரும்புகின்றனர். இதனால் மன்னர் பதவியை மகனுக்கே கொடுத்துவிட்டு சார்லஸ் ரோமானியாவின் மன்னராகக் கூடும் என்று கூறப்படுகிறது.

ரோமானியாவின் மன்னர் பரம்பரைக்கும், இங்கிலாந்தின் மன்னர் பரம்பரைக்கும் மூதாதையர்கள் மூலம் தொடர்பு உள்ளது. இந்த தொடர்பின்படி தான் இளவரசர் சார்லஸ் ரோமானியாவின் மன்னராக உள்ளார் என்று கூறுப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சார்லஸ் தான் ரோமானிய மன்னர் விலாட், தி இம்பாலரின் உறவினர் என்று தெரிவித்தார். ரோமானிய மன்னர் பரம்பரைக்கும், எனது பரம்பரைக்கும் தொடர்பு உள்ளது. அதனால் எனக்கு அந்த நாட்டில் உரிமை உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ரோமானியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் எலினா அட்ரியா கடந்த வாரம் லண்டனுக்கு சென்றார். அங்கு அவர் இளவரசர் சார்லஸை சந்தித்து மன்னராகப் பொறுப்பேற்பது குறித்து பேசினார் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்து மக்கள் மத்தியில் சார்லஸை விட அவரது மூத்த மகனான இளவரசர் வில்லியமிற்கு அதிக மதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரோமானியாவில் கடந்த 1947ம் ஆண்டு மன்னராட்சி நீக்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. தற்போது மீண்டும் மன்னராட்சி வரும் பட்சத்தில் சார்லஸ் மன்னராகக்ககூடும் என்று கூறப்படுகிறது.

English summary
Specualtions are there that the crown prince of England Charles could become the next king of Romania if the country's monarchy is restored.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X