For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல் சல்வடார் நாட்டில் அடுத்தடுத்து 700 முறை நில அதிர்வு-மக்கள் அச்சம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

எல்சல்வடார்: மத்திய அமெரிக்காவில் உள்ள எல்சல்வடார் நாட்டில் கடந்த மூன்று நாட்களுக்குள் 700க்கும் அதிகமான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. வீடுகள் சேதமடைந்ததால் மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஒருமுறை நில அதிர்வு ஏற்பட்டாலே வீடுகளை விட்டு வீதிகளில் தங்கி விடுகின்றனர் நம் ஊர் மக்கள். ஆனால் மத்திய அமெரிக்காவில் உள்ள எல்சல்வடார் நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் 700க்கும் அதிகமான முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை முதல் பூமி அதிர்வு ஏற்பட்டுக்கொண்டே இருப்பதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

உயிரிழப்பு இல்லை

இந்த நில அதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் ஒன்று புள்ளி 8 முதல் 4 புள்ளி 6 வரை பதிவாகியுள்ளன. இதனால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக மலைப்பகுதிகளில் வீடுகள் சரிந்து விழுவதால் கிராம மக்கள், தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர். 700க்கும் அதிகமான முறை நில அதிர்வுகள் உணரப்பட்டாலும் உயிரிழப்பு ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்சல்வடார் நாட்டில் கடந்த 2001ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரத்து 150 பேர் பலியாகினர், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
More than 700 slight to moderate earthquakes hit an area in eastern El Salvador in a 24-hour period, damaging dozens of homes but hurting no one.The brief quakes, which started Thursday and ranged from 1.8 to 4.6 in magnitude, have occurred in the municipality of El Carmen, some 163 km (101 miles) east of the capital of San Salvador, the country’s National Territory agency said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X