For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயர்நீதிமன்றத்திற்குள் கவர்ச்சி டிரஸ்ஸில் சுற்றிய வெளிநாட்டு தம்பதிக்கு ரூ. 2500 அபராதம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மும்பை: மும்பை உயர்நீதிமன்ற வளாகத்தில் கவர்ச்சியாக உடையணிந்து வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

செக்கோஸ்லோவாகியா நாட்டை சேர்ந்த தம்பதிகளான ராபர்ட் லாஸ்சோவா (49) மற்றும் அவரது மனைவி ஜானாஹலாஸ்சோவா (47)ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். சுற்றுலாவின் ஒரு பகுதியாக திங்கட்கிழமையன்று மும்பை ‌உயர்நீதிமன்றத்தை சுற்றிப்பார்ப்பதற்காக அங்கு சென்றனர்

கவர்ச்சி உடைக்கு அபராதம்

அவர்கள் இருவரும் படு கவர்ச்சிகரான உடையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கோர்ட்டில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இருவரையும் பிடித் போலீஸார் அவர்களை பொது இடத்தில் அநாகரீகமான உடையில் வந்ததாக கூறி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர்களுக்கு 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் வசூலிக்கப்பட்ட பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர். பார்வையாளர்கள் ஆட‌ை அணிந்து வரும் விவரம் குறித்து ‌தெளிவான அறிவிப்பு எதுவும் இல்லாததால் தங்களுக்கு இது பற்றி தெரியவில்லை என அந்த வெளிநாட்டு தம்பதிகள் கூறியுள்ளனர்.

English summary
A foreign couple who wore skimpy clothes had to pay a fine about US $50 (Rs2500) for violating the dress code imposed by the Bombay High Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X