For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களுக்காக போராட்டம் நடத்தி மக்களை வாட்டியெடுத்த சிபிஎம்!

By Chakra
Google Oneindia Tamil News

திருச்சி: முல்லைப் பெரியாறு பிரச்சனையை கேரள மாநில முதல்வர் அமைதியாக பேசித் தீர்க்காமல் தமிழக மக்களை மிரட்டி, பயமுறுத்தும் வகையில் பேசி வருகிறார். இது தேசிய ஒருமைப்பாட்டு உணர்வுக்கு ஆபத்தாக முடியும். தமிழர்களை அடிப்பதும், தமிழக போலீசாரை அடித்து விரட்டுவதும் ஆத்திரமூட்டும் செயலாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், பால் விலை, பஸ் கட்டணத்தை தமிழக அரசு இரு மடங்காக உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பெட்ரோலிய நிறுவனங்களை போல உர உற்பத்தி நிறுவனங்களும் தாங்களே அதன் விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என்ற கொள்கையால் தற்போது உர விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைத் தடுக்க, மீண்டும் மத்திய அரசே பெட்ரோல், உர விலையை நிர்ணயிக்க வேண்டும்.

பால் விலை, பஸ் கட்டண உயர்வு மற்றும சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய மூதலீடு அனுமதிப்பது ஆகியவற்றை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 7ம் தேதி மறியல் போராட்டம் நடைபெறும்.

முல்லைப் பெரியாறு பிரச்சனையை கேரள மாநில முதல்வர் உள்பட பலரும் அமைதியாக பேசி தீர்க்காமல் தமிழக மக்களை மிரட்டி, பயமுறுத்தும் வகையில் பேசி வருகின்றனர். இது தேசிய ஒருமைப்பாட்டு உணர்வுக்கு ஆபத்தாக முடியும். தமிழர்களை அடிப்பதும், தமிழக போலீசாரை அடித்து விரட்டுவதும் ஆத்திரமூட்டும் செயலாக உள்ளது. இதில் மத்திய அரசு தலையிட வேண்டும்.

முல்லைப் பெரியாறு பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவதாக கேரளா தான் கூறி வருகிறது. ஆனால், அங்கேயே புதிய அணையும் கட்டப் போவதாக சொல்கிறார்கள். நில நடுக்கம் உள்ள பகுதியில் புதிய அணை கட்டப்பட்டால் மட்டும் பாதுகாப்பாக இருக்குமா? என்றார் பாண்டியன்.

மார்க்சிஸ்ட் கட்சி மறியல்-போலீஸ் தடியடி:

இந் நிலையில் பால் விலை, பஸ் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகிலும், பாரிமுனை குறளகம் அருகிலும் மறியல் போராட்டம் நடத்தினர்.

சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரே ரோட்டின் இருபுறமும் தொண்டர்கள் உட்கார்ந்து மறியல் போராட்டம் நடத்தியதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் மக்கள் பெரும் இன்னுக்கு ஆளாகினர். இதையடுத்து மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

அப்போது போலீசாருக்கும் சிபிஎம் தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் டி.வி. கேமராமேன் ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

பாரிமுனை குறளகம் அருகே செளந்தர்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த மறியலால் சென்னை பாரிமுனை பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்கும் கடும் வெயிலில் மக்கள் டிராபிக் ஜாமில் சிக்கி தவித்தனர்.

English summary
CPI State secretaaryy Tha.Pandian has announced that his party will protest against milk price hike along with fertilizer price hike
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X