For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலி ரேஷன்கார்டு, உணவு பொருட்கள் பதுக்கல், கடத்தல்: துப்பு கொடுப்போருக்கு சன்மானம்

By Siva
Google Oneindia Tamil News

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் போலி குடும்ப அட்டைகள், உணவுப் பொருட்கள் கடத்தல், பதுக்கல் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமது அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பெரம்பலூர் மாவட்டத்தில் போலி குடும்ப அட்டைகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு அந்த தகவலின் பேரில் அவ்வாறான குடும்ப அட்டைகள் பறிமுதல் செய்து ரத்து செய்தபின் தகவல் அளித்தவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ. 250 வெகுமதி வழங்கப்படும்.

அதே போல் உணவுப் பொருட்கள் கடத்துபவர்கள் மற்றும் பதுக்கி வைத்திருப்பவர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு அந்த கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக அளிக்கப்படும் தகவலின் அடிப்படையில் கைப்பற்றுகை செய்யப்பட்ட பின் அந்த தகவல் தரும் நபர்களுக்கு ரூ.1000 வெகுமதி வழங்கப்படும்.

எனவே போலி குடும்ப அட்டை, கடத்தல் பதுக்கல் குறித்த தகவல்களை மாவட்ட வழங்கல் அலுவலர் 9445000270, தனி தாசில்தார் (பறக்கும்படை) 9445045617, வட்ட வழங்கல் அலுவலர் பெரம்பலூர் 9445000271, வேப்பந்தட்டை 9445000272, குன்னம் 9445000273 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.

இது பற்றி தகவல் அளிப்பவர்களின் பெயர் மற்றும் முகவரி ரகசியமாக வைக்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Perambalur district collector Dr. Darez Ahamed has announced that a reward of Rs.245 will be given to those who give information about fake ration cards in the district and Rs.1000 to those who inform about hoarding food particles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X