For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Lorries
நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.

ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.

English summary
TN lorry owners have warned Kerala govt and police for the attacks on TN lorries and drivers in Kumuli. The owners association president Nallathambi said that, We will not run any lorry to Kerala if attack continues. We will stop all the lorries from TN to Kerala. We will not allow any lorry from Kerala to enter into our state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X