For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லைப் பெரியாறு: கேரள அரசுக்கு எதிராக தென்காசியில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Google Oneindia Tamil News

தென்காசி: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் தென்காசியில் ஆர்பாட்டம் நடத்தினர்.

முல்லை பெரியாறு பிரச்சினையில் கேரள அரசுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

நெல்லை மாவட்டம் புளியரை பகுதியில் நாம் தமிழர் இயக்கம், முல்லை பெரியாறு அணை மீட்பு போராட்ட குழு, மதி்முக, தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தமிழக-கேரள எல்லைகளில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பத்திரிக்கையாளர்கள் ஆர்பாட்டம்

இந்தநிலையில் வியாழக்கிழமையன்று திருநெல்வேலி புறநகர் மாவட்ட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் தென்காசி தாலுகா அலுவலகம் முன்பு மாநில தலைவர் ரவீந்திர தாஸ் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏரளாமான பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டு கேரள அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இசக்கிராஜன், கணேசன், சண்முகம், பிரகாஷ், ஜீவா, மகேஸ்வரன், அமல்ராஜ், மைதீன், செல்ல பெருமாள், செந்தில், முத்துசாமி, பரமசிவன், மனோகரன் உள்பட 50க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் பங்கேற்றனர்.

English summary
Journalists of various media organizations staged a demonstration against Kerala govt in Tenkasi today. More than 50 journalists participated in the agitation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X