For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புயல்: தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் கவிழ்ந்தன; சென்னை கடற்கரை சாலை மூடல்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: தானே புயலின் 120 கி.மீ. வேக சூறாவளிக் காற்றுக்குத் தாக்குப் பிடிக்காமல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பெரிய வாகனங்கள் கூட கவிழ்ந்தன.

சென்னை-புதுச்சேரி இடையிலான கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி உள்ளிட சில கன ரக வாகனங்களும் புயலுக்குத் தாக்குப் பிடிக்கவில்லை. அவை சாலையிலேயே கவிழந்தன.

பேருந்துகள் கூட அல்லாடியபடியெ சென்றன. இதனால் பயணிகள் பீதிக்குள்ளாயினர்.

இதனால் பெரும்பாலான வாகனங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.

இந்தப் பகுதியில் கடும் காற்று காரணமாக மரங்கள், மொபைல் கோபுரங்கள் விழுந்துள்ளன.

சென்னையில் பலத்த மழை காரணமாக கடலோரங்களில் கடும் கடல் சீற்றம் காணப்படுகிறது. இதனால் மெரீனாவில் கடற்கரையோர சாலைகளை போலீசார் மூடி போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர்.

120 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் சாலைகளில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடும் காற்று காரணமாக மரங்கள், மொபைல் கோபுரங்கள் விழுந்து, கிழக்கு கடற்கரை சாலை, விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

English summary
Even as it is expected to cross Tamil Nadu between Nagapattinam and Chennai early this morning, Cyclone Thane has been forecast to wreak havoc in Chennai on Friday with more rainfall, squally weather and rough winds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X