For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் முகேஷ் அம்பானி ரூ. 1,500 கோடி முதலீடு!

By Chakra
Google Oneindia Tamil News

CNN IBN
மும்பை: சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி நிறுவன குழுமத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 1,500 கோடி வரை முதலீடு செய்யவுள்ளதாகத் தெரிகிறது.

சிஎன்என்-ஐபின், சிஎன்பிசி-டிவி 18 வர்த்தக சேனல், ஐபிஎன்-7 இந்தித் தொலைக்காட்சி, யாத்ரா.காம், மணிகன்ட்ரோல்.காம், ஹோம் ஷாப், கலர்ஸ், நிக்கெலோடியன் உள்ளிட்ட தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள், வார இதழ்களை நடத்தி வருகிறது நெட்வோர்க் 18 குழுமம். மேலும் வயாகாம் 18 என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.

இதன் உரிமையாளர் ராகவ் பெகல். இவரும் ராஜ்தீப் சர்தேசாயும் என்டிடிவியில் பணியாற்றியவர்கள். அதிலிருந்து பிரிந்து வந்து நெட்வோர்க் 18 குழுமத்தை உருவாக்கினர். இந்தத் குழுமத்தின் தொலைக்காட்சி சேனல்களின் தலைமை ஆசிரியராக உள்ளார்.

இந்தியாவின் மிகப் பிரபலமான டிவி, இணையத்தளங்களை நடத்தினாலும் இந்த நெட்வோர்க் 18 நிறுவனம் இப்போது ரூ. 1,400 கோடி நஷ்டத்தில் உள்ளது.

இந் நிலையில் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ஈடிவி நிறுவனத்தையும் இந்த நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளது. ஈநாடு குழுமத்திடம் பல்வேறு மொழிகளான பத்திரிக்கைகள், மற்றும் பல்வேறு மொழிகளிலான ஈடிவி தொலைக்காட்சிகளும் உள்ளன.

இந்த நிறுவனத்தையும் நெட்வோர்க் 18 நிறுவனத்தையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 3,5000 கோடி வரை நிதி தேவைப்படும் என்று தெரிகிறது. இந்த நிதியில் ஒரு பகுதியை சந்தையில் திரட்ட நெட்வார்க் 18 திட்டமிட்டுள்ளது.

இந் நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் நெட்வோர்க் 18 குழுமத்தில் ரூ. 1,500 கோடி வரை முதலீடு செய்யவுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகலாம்.

English summary
The market is speculating Mukesh Ambani’s Reliance Industries to invest in Network18 Group to fund the acquisition of regional television broadcaster ETV. The investment is likely to be made through a subsidiary. Network18 has news channels CNBC-TV18, CNBC Awaaz, CNN-IBN and IBN7, and owns 50 per cent stake in Viacom18 that runs Hindi general entertainment channel Colors and children’s channel Nickelodeon. The group also has interests in film production and distribution through Viacom18 Motion Pictures.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X