For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேசியக் கொடியை அன்னா எப்படி பயன்படுத்தலாம்: தடைவிதிக்கக் கோரி சென்னை ஐகோர்டில் வழக்கு

By Siva
Google Oneindia Tamil News

Anna Hazare
சென்னை: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினர் தங்கள் போராட்டங்களின்போது தேசியக் கொடியை பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்குரைஞர் என். ஜான் செல்வராஜ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது,

ஊழலுக்கு எதிரான போராட்டங்களை அன்னா ஹசாரே நடத்தி வருகிறார். ஊழலுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது ஏற்கக் கூடியதே. அந்தப் போராட்டம் மரியாதைக்குரியது ஆகும்.

எனினும், அன்னா ஹசாரேவோ அல்லது அவரது இயக்கத்தினரோ தங்களது போராட்டங்களில் தேசியக் கொடியைப் பயன்படுத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை. மூவர்ண தேசியக் கொடி என்பது இந்த நாட்டின் பெருமைகளைப் பறைசாற்றுவது.

அத்தகைய பெருமை மிக்க தேசியக் கொடியை அன்னா ஹசாரே தனது போராட்டங்களில் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
A lawyer named N. John Selvaraj has filed a case in Chennai high court seeking it to ban Anna and his team members from using national flag during their protest meetings. Team Anna usually waves national flag in the stage whenever the Gandhian fasts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X