For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப.சிதம்பரம் மீது நடவடிக்கை உண்டா, இல்லையா?-பா.ஜ.க.

By Mathi
Google Oneindia Tamil News

Ravi Shankar Prasad
டெல்லி: 2ஜி ஒதுக்கீடு ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மத்திய அரசு பொறுப்பேற்று நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளதாவது:

உச்சநீதிமன்றத் தீர்ப்பால் 2ஜி ஊழலுக்கு மத்திய அரசு கூட்டுப் பொறுப்பு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்போதாவது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீது உரிய நடவடிக்கையை பிரதமர் மேற்கொள்வாரா என்பதை எதிர்பார்க்கிறோம்.

2ஜி ஊழல் தொடர்பாக மெளனமாக இருந்து வரும் சோனியா காந்தி இப்போதாவது கருத்து தெரிவிப்பாரா? என்றார் அவர்.

இதேபோல் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஜேட்லி, முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும் 2ஜி ஊழலில் ப.சிதம்பரத்தின் தொடர்பு பற்றி கருத்துத் தெரிவித்த அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற அரசாங்கத்தின் கருவூலத்துக்கு பொறுப்பானவர் நிதி அமைச்சர். ஆனால் அதைச் செய்யவில்லை" என்றார்.

English summary
The Supreme Court decision to cancel 122 telecom licenses issued in 2008 by A Raja has shattered "the entire credibility of the decision-making process of this government," said the BJP today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X