For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிதம்பரம் பேச்சை ராசாதான் கேட்கலையாம்: போட்டுக் கொடுக்கும் சிபல்!

By Mathi
Google Oneindia Tamil News

Kapil Sibal
டெல்லி: 2ஜி ஊழலில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு தொடர்பே இல்லை என்றும் நிதி அமைச்சகத்தின் அறிவுரைகளை அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாதான் பின்பற்றவில்லை என்றும் தற்போது தொலைத் தொடர்புத்துறையைப் பார்த்து வரும் அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கபில் சிபல் கூறியுள்ளதாவது:

தொலைத்தொடர்பு கொள்கை விஷயத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சில விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளது. அடுத்தகட்டமாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்காக அரசு காத்திருக்கிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கைகளாலேயே அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. 2ஜி ஊழலில் ப.சிதம்பரம் ஒருபோதும் சம்பந்தபடவில்லை. நிதி அமைச்சகத்தின் அறிவுரையை ஆ. ராசா கடைப்பிடிக்கப்படவில்லை.

தெளிஞ்சிருச்சு..பாடம் கத்துகிட்டோம்

உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் எதிர்கால அம்சங்கள் மிகவும் தெளிவாகியுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு மூலம் ஒரு அமைச்சர் எப்போதும் மற்றவர்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்கிற பாடத்தை கற்றுக் கொண்டுள்ளோம்.

பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்.

வருவாய் இழப்புக்குக் காரணமான பாஜக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். விலை நிர்ணய விவகாரத்தில் நாங்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிப்போம். ஸ்பெக்ட்ரம் வெளியிடப்பட வேண்டுமென்றால் இனி நிச்சயம் ஏலமுறைதான். உச்சநீதிமன்றத் தீர்ப்பை பின்பற்றுவோம். பிரதமரோ அப்போதைய நிதி அமைச்சரோ இந்த ஊழலுக்கு பொறுப்பாக முடியாது என்பது சிபலின் கருத்து.

சிபல் பாடம் கத்துக் கொள்வதற்கு இத்தனை காலமாகியுள்ளது. அதற்கு ஒரு சுப்ரீம் கோர்ட் தேவைப்பட்டுள்ளது... என்னா ஒரு வெகுளித்தனம்..!

English summary
Telecom Minister Kapil Sibal on Thursday defended the government in the 2G spectrum scam and blamed the telecom policy brought by the NDA government in 2003 and followed by former telecom minister A Raja for the loss to the exchequer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X