For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பயங்கரவாத தடுப்பு மையம்: மாநில அரசுகளுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயார்

By Mathi
Google Oneindia Tamil News

லக்னெள: தேசிய பயங்கரவாத தடுப்பு மைய சர்ச்சை தொடர்பாக மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் த்ரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கபில் சிபல் கூறியுள்ளதாவது:

தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தில் தவறுகள் இருப்பின் அதனை பேச்சுவார்த்தை மூலம் நீக்கிக்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்கிறது. இந்த மையத்துக்கான அதிகாரங்கள் மாநில அரசுகளின் உரிமைகளிலிருந்து எடுக்கப்படவில்லை.

ஏற்கெனவே மத்திய அரசுக்கான அதிகாரங்களையே தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பயங்கரவாத தடுப்பு மையமானது ஒரு இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் மூவர் மட்டுமே கொண்டது அல்ல.. பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகளின் இயக்குநர்கள் அல்லது ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சக்திகளும் அடக்கம். இந்த கவுன்சில்தான் தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை கண்காணிக்கும்.

பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பாக முதலில் நான் கூட முதலில் அறிந்திருக்கவில்லை. அண்மையில்தான் இதைப் பற்ரித் தெரிந்துகொண்டேன் என்றார் அவர்.

மாநில அரசுகள் எதிர்ப்பு

மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமலேயே தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை அமைத்ததற்கு தமிழ்நாடு உட்பட 13 மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர் ஜெய்லலிதா இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகனுக்கு 2 கடிதங்களை எழுதியிருக்கிறார். நவீன் பட்நாயக், மமதா பானர்ஜி மற்றும் குஜராத்தின் நரேந்திர மோடி உள்ளிட்டோரும் மன்மோகனுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

English summary
With the chorus against the formation of National Counter-Terrorism Council turning louder, government today said it is ready for a dialogue to remove any misgivings or concerns of states opposing it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X