For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை வேலை நிறுத்தம்: ஆட்டோ, பஸ் ஓடாது?

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நாடு முழுவதும் நாளை (பிப்ரவரி 28) பொது வேலைநிறுத்தம் செய்ய தொழிலாளர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இதில் தமிழகத்தில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கலந்துகொள்வதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாது என எதிர்பார்க்கப்படுகிறது. பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கமும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, திமுகவின் தொ.மு.ச. பேரவை, பாஜக சார்புள்ள பி.எம்.எஸ். உள்பட 17 தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன.

வங்கித்துறையைச் சேர்ந்த 7 தொழிற்சங்கங்கள், தொலைத் தொடர்புத் துறை, அஞ்சல் துறை, மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்கின்றன.

ஆனால், அதிமுக தொழிற்சங்கம் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதனால் தமிழகத்தில் பெரும்பாலான ஆட்டோக்கள், பஸ்கள் ஓடாது என்று தெரிகிறது.

English summary
Eleben trade unions together have given call for a general strike all over the nation on Tuesday February 28. Gurudas Dasgupta, general secretary of All India Trade Union Congress, said that so many unions have come together for the first time in history of the nation at the national level for the same cause. Employees in private sector have also extended support to the strike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X