For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சதானந்த கெளடா தற்காலிக முதல்வர் என கட்காரி உறுதியளித்தார்-ஏமாந்த எடியூரப்பா பேட்டி

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக முதல்வர் பதவியில் தம்மை மீண்டும் அமர்த்துவதாக பாஜக தலைவர் நிதின் கட்கரி உறுதியளித்திருந்ததாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

எடியூரப்பாவுக்கு இன்று பிறந்தநாள்.. 69 வயது:

சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் சிக்கி சிறை மீண்ட எடியூரப்பா தமது பிறந்த நாளான இன்றைக்குள் கர்நாடக முதல்வர் பதவியையோ அல்லது கட்சியின் மாநிலத் தலைவர் பதவியையோ அளிக்க வேண்டும் என்று பாஜகவுக்கு கெடு விதித்திருந்தார்.

ஆனால் பெங்களூர் வந்த அக்கட்சித் தலைவர் நிதின் கட்கரியோ, கட்சியிலிருந்து வெளியே போகிறவர்கள் போகலாம் என கடுப்படித்துவிட எடியூரப்பா ஜெர்க் ஆகிவிட்டார்.

எடியூரப்பா தனிக் கட்சித் தொடங்குவார் என்று கூறப்பட்ட நிலையில் இருகரம் நீட்டி காங்கிரசும் அவரை வரவேற்கத் தயாராக இருந்தது.

இந்நிலையில் எல்லா எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கி புஸ்வானமாக்கி பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சதானந்தா கவுடா தற்காலிக முதல்வர்தான் என்று கட்சித் தலைவர் நிதின் கட்காரி என்னிடம் கூறினார். உரிய நேரத்தில் என்னை மீண்டும் முதல்வராக்குவதாக உறுதி அளித்தார். அதுதான் கர்நாடகாவில் இப்போது எழுந்துள்ள ஊகங்களுக்கு காரணம்.

கட்சியில் இனி எந்தப் பொறுப்பும் தாருங்கள் என்று கேட்டு மன்றாடப் போவதில்லை. பாஜகவில் சாதாரணத் தொண்டனாக இனி பணியைத் தொடருவேன் என்றார் அவர்.

English summary
Former Karnataka chief minister BS Yeddyurappa, who turned 69 on Monday, expressed disappointment over not getting the chief minister's position back and said that he won't ask for any position in the Bharatiya Janata Party (BJP) from now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X