For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயர்கல்வி கவுன்சில் துணைத் தலைவராக பி.எச்.பாண்டியன் மனைவி சிந்தியா நியமனம்

By Chakra
Google Oneindia Tamil News

Cynthia Pandian
சென்னை: தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் துணைத் தலைவராக பேராசிரியை சிந்தியா பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவரான பி.எச்.பாண்டியனின் மனைவியாவார். சிந்தியா, கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாநில அளவில் உயர்கல்வி திட்டங்களின் வளர்ச்சிக்காகவும், பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) திட்டங்களை ஒருங்கிணைக்க உதவும் வகையிலும் மாநில உயர்கல்வி கவுன்சில் தொடங்கப்பட்டது.

இந்த கவுன்சிலின் துணைத் தலைவராக இருந்துவந்த பேராசிரியர் ராமசாமியின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய துணைத் தலைவராக பேராசிரியை சிந்தியா பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 3 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார்.

சென்னை பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர், பல்கலைக்கழக கல்வி பணியாளர் கல்லூரி இயக்குனர், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் என பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

இவரது கணவர் பி.எச்.பாண்டியன் தமிழக சட்டசபை சபாநாயகராகவும், எம்.பி.யாகவும் பணியாற்றியவர். மகன் பி.எச்.மனோஜ் பாண்டியன் அதிமுக ராஜ்யசபா எம்பியாக உள்ளார்.

உயர்கல்வி கவுன்சில் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிந்தியா பாண்டியன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

English summary
Former assembly speaker and ADMK leader PH Pandian's wife Cynthia Pandian is appointed as higher education council vice chariman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X