For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரிசாவின் ராயகடா மாவட்டத்தில் நுழைய வெளிநாட்டவருக்கு தடை

By Mathi
Google Oneindia Tamil News

ராயகடா: ஒரிசா மாநிலத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் ராயகடா மாவட்டத்தில் வெளிநாட்டவர் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டாஅட்சியர் நிதீன் அறிவித்துள்ளார்.

ராயகடா மாவட்டமானது ஆந்திர மாநில எல்லையையொட்டியுள்ளது. ராயகடா மாவட்டத்தில் இன்னும் பழமையான வாழ்க்கை முறையை பின்பற்றக் கூடிய திராவிட மொழிபேசும் பழங்குடி இனத்தவர் அதிகம் வாழ்கின்றனர்.

வெளிஉலகம் எட்டிப்பார்க்காத, அரசாங்கம் இதுவரை எட்டிப்பார்க்காத இம்மக்கள் வாழும் மலைகிராமங்கள்தான் மாவோயிஸ்டு போராளிகளின் உறைவிடமாகவும் இருக்கிறது.

ராயகடா மாவட்டத்தையொட்டிய கோரபுட் மற்றும் மல்காங்கிரி ஆகியவையும் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக உள்ளது. கோரபுட் மாவட்டம் சத்தீஸ்கரையும் ஒட்டியது.

இதனால் பழங்குடி இன மக்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டவர் எவரும் வருகை தந்து மாவோயிஸ்டுகளால் கடத்தப்படும் சூழ்நிலையைத் தடுக்க வெளிநாட்டவர் நுழைய மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

ராயகடா மாவட்டத்தையொட்டி கந்தமால் மற்றும் கஞ்சம் மாவட்ட எல்லையில் இத்தாலியர் கடத்தப்பட்டதும் கோரபுட் மாவட்டத்தில் எம்.எல்.ஏ.கடத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
With two Italian tourists being taken hostage by Maoists in Kandhamal district, the authorities of Rayagada, another Left wing extremist-hit tribal district, has restricted the entry of foreigners.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X