For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 ஆண்டுகளில் 11,500 நோயாளிகள் மரணம்

By Siva
Google Oneindia Tamil News

Aiims Hospita
டெல்லி: டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகத்தில் (எய்ம்ஸ்) சிகிச்சை பெற்று வருபவர்களில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 11,500 பேர் இறந்துள்ளது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த அஜய் மராதே என்பவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் எத்தனை பேர் இறந்துள்ளார்கள் என்று கேட்டு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு வந்த பதிலில் தான் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 11,500 பேர் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.

2008-2009ம் ஆண்டில் 4,100 பேரும், அதற்கு அடுத்த ஆண்டில் 4,159 பேரும், 2010-2011ம் ஆண்டில் 4,177 பேரும் இறந்துள்ளனர். மேலும் 9 பேர் மருத்துவமனையில் உள்ள ஆர் பி சென்டரில் இறந்துள்ளனர்.

இத்தனை பேர் இறந்தும் அவர்களின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய மருத்துவமனை எடுக்கவில்லை. ஒரு மனிதனின் உடலில் இருந்து 8 உறுப்புகளை தானம் செய்யலாம். உடல் உறுப்புகளை தானம் செய்ய மக்கள் முன்வராதது துரதிர்ஷ்டவசமானது என்று மராதே தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸின் மருத்துவமனை நிர்வாகத் துறை பேராசிரியர் டாக்டர் எஸ் சத்பதி கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 11,566 பேர் இறந்துள்ளனர். இதுதவிர 960 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

English summary
Over 11,500 patients died at the All India Institute of Medical Sciences in the past three years while undergoing treatment, an RTI reply has revealed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X