For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா ஆஜர்-வாக்குமூலம் பதிவு செய்யும் பணி மீண்டும் தொடக்கம்

By Chakra
Google Oneindia Tamil News

Sasikala
பெங்களூர்: வருமானத்தை மீறி சொத்துக் குவித்த வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் இன்று ஆஜராயினர்.

இதையடுத்து சசிகலாவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. முன்னதாக சசிகலா இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகமல் இழுத்தடித்து வருவதற்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜூனய்யா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

மேலும் இன்றைய விசாரணையில் சசிகலா ஆஜராகாவிட்டால் கடும் விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருந்தார். இதையடுத்து சசிகலா இன்று ஆஜரானார்.

சசிகலாவிடம் இன்று பகல் வரை நீதிபதி மல்லிகார்ஜுனையா சுமார் 40 கேள்விகள் வரை கேட்டுள்ளார். தொடர்ந்து இன்னும் 300 கேள்விகள் வரை கேட்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

English summary
The Special Court hearing the disproportionate assets case against Tamil Nadu Chief Minister Jayalalithaa and others on Saturday dismissed the pleas of the accused for inspection of certain unmarked documents. Following this Sasikala and illavarasi appeared in court today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X