For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.பிக்களை விமர்சித்த ராம்தேவ்க்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி உரிமை மீறல் தீர்மானம்

By Mathi
Google Oneindia Tamil News

Baba ramdev
டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களை இழிவுபடுத்தி பேசிவரும் யோகா குரு ராம்தேவ், கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் கொண்டுவந்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் சைலேந்திர குமார், அவையின் உறுப்பினர்களை இழிவாகப் பேசி அவை உறுப்பினர்களின் உரிமையை மீறிய குற்றத்துக்காக ராம்தேவ் உள்ளிட்டோருக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று தமது தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ராம்தேவ், கெஜ்ரிவால் ஆகியோர் ஊழல் மற்றும் கருப்புப் பணத்துக்கு எதிராகப் பேசுவதாகக் கூறினாலும் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை இழிவாகப் பேசிவருகின்றனர்.

அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவால், எம்.பிக்கள் பலரும் கொள்ளையர்கள், ரேப்பிஸ்ட் என்று சாடியிருந்தார். சத்தீஸ்கர் மாநில சுற்றுப் பயணத்தில் நேற்றுப் பேசிய ராம்தேவும் இதேபோல் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பல்வேறு கட்சி எம்.பிக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் யாதவ் மிகவும் காட்டமாக, ராம்தேவ் ஒரு மென்ட்டல் கேஸ் என்று பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது,

English summary
A privilege motion has been moved by a Samajwadi Party MP against Baba Ramdev for remarks by the yoga icon against politicians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X