22ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள்: 27ல் மதிப்பெண் சான்றிதழ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் 22ம் தேதி வெளியாகும் என்றும், வரும் 27ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பிளஸ் டூ பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி துவங்கி 30ம் தேதி முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7.61 லட்சம் மாணவ-மாணவியர் பிளஸ் டூ தேர்வு எழுதினர். கடந்த 12ம் தேதியே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் வரும் 22ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணபிக்க வரும் 30ம் தேதி தான் கடைசி நாள் என்பதால் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழக்கப்படும் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவி்ததுள்ளது. மாணவ-மாணவியர் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளிலேயே மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

கடந்த ஆண்டு மே மாதம் 9ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
+2 exam results will be released on may 22 and mark sheets will be given on may 27.
Please Wait while comments are loading...