For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை-பெங்களூர் இடையே புல்லட் ரயில்: ஆய்வுகள் தீவிரம்

Google Oneindia Tamil News

Bullet train
சென்னை-மைசூர் இடையே பெங்களூர் வழியாக புல்லட் ரயில் விடுவதற்கான திட்டம் சூடுபிடித்துள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருவதால் விரைவில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்க அதிவேக ரயில்களை இயக்குவதற்கான திட்டங்களை மத்திய ரயில்வே அமைச்சகம் முடுக்கி விட்டுள்ளது. புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஜப்பானுடன் இணைந்து இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப குழுவினருடன், மத்திய ரயில்வே அமைச்சகம் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.

முதற்கட்டமாக, சென்னை-மைசூரு இடையே பெங்களூர் வழியாக முதல் புல்லட் ரயில் விடுவதற்கான திட்டப் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இத்திட்டத்திற்கான ஆய்வுகளை தற்போது சென்னை-மைசூர் ரயில் வழித்தடத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த ஆய்வுப் பணிகளை முடித்து ஜப்பான் நிபுணர்கள் தொழில்நுட்ப அறிக்கையை மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கிய பின் புல்லட் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு மத்திய அரசு தவிர்த்து தமிழக, கர்நாடக அரசுகள் மற்றும் ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டதிற்கு முதற்கட்டமாக ரூ.1 லட்சம் கோடியை முதலீடு செய்யப்பட உள்ளது. ஒரு கிலோமீட்டருக்கு புல்லட் ரயில் பாதை அமைக்க ரூ.200 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக, கர்நாடக மக்களின் கனவு திட்டமாக இது கருதப்படுகிறது. இத்திட்டம் நிறைவடைந்தால் மணிக்கு 320 கிமீ வேகம் வரை புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என்பதால், சென்னையிலிருந்து பெங்களூருக்கு 2 மணிநேரத்தில் சென்றுவிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Railways' ambitious project of running bullet train between Chennai- Bangalore has been fast tracked as the state-run transporter is ready with the Cabinet note for setting up of a high speed rail authority.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X