For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண்ணீர் வடித்த நோயாளிகள் ... புது தண்ணீர் மோட்டார் கொடுத்து உதவிய ஏ.வ.வேலு

Google Oneindia Tamil News

E V Velu
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு முன்னாள் திமுக அமைச்சர் ஏ.வ.வேலு வந்தபோது குடிநீருக்கும், கழிவறை செல்வதற்கும் தண்ணீர் வசதி இல்லை என்று கூறி பெண்கள் அழுதபடி புகார் கூறினர். இதையடுத்து உடனடியாக புதிய மோட்டார் பம்ப் வாங்க உத்தரவிட்ட வேலு, அதை டாக்டர்களிடம் கொடுத்து உடனடியாக பொறுத்தி தண்ணீர் வசதியை ஏற்படுத்த உத்தரவிட்டார்.

மாஜி அமைச்சரின் இந்த அதிரடி செயலால் நோயாளிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி நேற்று முன்தினம் அரசு மருத்துவமனைக்கு வந்தார் வேலு. அங்கு அன்றைய தினம் பிறந்த 26 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக அளித்தார்.

அப்போது பிரசவ வார்டில் இருந்த பெண்களும், நோயாளிகளும் அமைச்சரை சூழ்ந்து கொண்டு குறைகளைக் கூறி கதறி அழுதனர். குடிக்க தண்ணீ்ர் இல்லை, பாத்ரூம் போக முடியவில்லை என்று கூறிக் குமுறினர்.

இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டார் வேலு. அதற்கு அவர்கள், மோட்டார் பம்ப் பழுதாகியுள்ளது. மிகப் பழைய மோட்டார் அது என்றனர். இதைக் கேட்ட வேலு, உடனடியாக தனது உதவியாளர்களை அழைத்து புதிய பம்ப் வாங்க உத்தரவி்ட்டார்.

இதையடுத்து புதிதாக 2 குதிரை சக்தி கொண்ட மோட்டார் பம்ப் வாங்கி வரப்பட்டது. அதை டாக்டர்களிடம் கொடுத்த வேலு, உடனடியாக அதைப் பொறுத்துமாறும் உத்தரவிட்டார். மேலும் மருத்துவமனை ஊழியர்களோடு சேர்ந்து திமுகவினரும் உதவ உத்தரவிட்டார்.

அமைச்சரின் இந்த அதிரடி செயலால் நோயாளிகள், குறிப்பாக பெண்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

English summary
Former DMK minister A.V.Velu helped patients in Thiruvannamalai GH by ordering a new jet pump to the hospital to solve the water problem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X