பயிற்சி டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்
சென்னை: சென்னை அரசு பொது மருத்துவமனையில் டாக்டரை தாக்கியவர்கள் மீது புதிய சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளைப் பார்க்க வந்தவர்களால் கடந்த வாரத்தில் மட்டும் டாக்டர்கள் 2 முறை தாக்கப்பட்டனர். இதையடுத்து டாக்டர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை கண்டித்தும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரியும் பயிற்சி டாக்டர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் மாநிலம் தழுவிய அளவில் கடந்த 4ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அமுதனைப் பார்க்க சிலர் கும்பலாக வந்தனர். அவர்களை கும்பலாக உள்ளே விட மறுத்த மருத்துவக் கல்லூரி மாணவரான ராஜேஷ் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டாக்டரை தாக்கிய 6 பேர் மீது தமிழ்நாடு மருத்துவ சேவை நபர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவன சட்டம் என்ற புதிய சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கிடையே டாக்டர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடிவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பயிற்சி மருத்துவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர். ஆனால்
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு விஜய் வேண்டுகோள் விடுக்கவிருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications